பக்கம்:நல்ல பிள்ளையார்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலைப்பாம்பும் நரியும் 53

'தம்பி, நல்ல சமயத்தில் வந்தாய். நான் மறு படியும் சங்கடத்தில் மாட்டிக் கொண்டு விட்டேன், என் வாயைப் பார்! முள் கொத்துக் கொத்தாக வாயில் நின்றுவிட்டது, விழுங்க முடியவில்லை. விஷமுள் போல இருக்கிறது. வாயெல்லாம் கடுக் கிறது' என்று பாம்பு மறுபடியும் கெஞ்சின குரலிலே பேசியது.

"அண்ணே, உன் ஆபத்தைத் தீர்க்க நான் வரவேனும், ஆல்ை நீ உன் வாக்கைக் காப்பாற்ருமல், எனக்குக் கொடுத்ததைப் பங்கு போட வருகிருய். உனக்கு உபகாரம் செய்வதற்கு மனசு வருமா ?” என்று கம்பீரமாகக் கேட்டது நரி,

'தம்பி, தம்பி, நான் செய்தது தப்புத்தான், இனிமேல் அப்படி நடக்காது, எல்லா நண்டுகளேயும் நீயே சாப்பிடு. எப்படியாவது இந்த முள்ளே எடுத்து விடப்பா ? என்னுலே வலி தாங்க முடியவில்லை” என்று மறுபடியும் குழைந்து கெஞ்சியது பாம்பு.

'நீ உன் வாக்கை இனிமேலாவது காப்பாற்று

வாய் என்ற நம்பிக்கையின் மேல் உனக்கு மறுபடி

யும் உதவி செய்ய வருகிறேன். இனி மேலாவது என்னே ஏமாற்ருமல் இரு” என்று நரி சொல்லியது.

'தம்பி, திருப்பி த் திருப்பி அதையே சொல்லாதே ! எனக்குப் புத்தி வந்து விட்டது. சீக்கிரம் இந்த முள்ளே எடு” என்று பாம்புசொல்லவே,