பக்கம்:நாகப்பட்டினம்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

恩器 நாகபட்டினம்

இல்லை. ஆங்காங்கு வேறுபட்டும் கையாளப்பட்டன. நாகை நகரம் "திருவாரூர்ச் சீமை ஊராக,

"னாகப்பட்டணம்ச் ைேம ஊரவர்"(10) என்று ைேமத் தலைப்பில் குறிக்கப்பட்டது. மேலே நிலப்பகுப்புச் சொற்களில் இல்லாத "பர்க்கணா" என்றொரு நகரைக் குறிக்கும் சொல் நாகைக்குக் கொள்ளப்பட்டுள்ளது. -

"திருவாரூர்ச் சீமை நாகப்பட்டிணம் பற்க்கனா வுட்பட (11) என்று திருவாவடுதுறை ஆதினச் செப்பேடு 1-இல் உள்ளது.

மராத்தியர் ஆட்சியில் தமிழ் மரபுகள் யாவும் தலைகீழாயின. மராத்தியர் ஆட்சியில் கொண்டாடப்பெற்ற மன்னர், மக்கள் விழாக்களின் பட்டியல் வருகிறது:

"நவராத்திரி, விசயதசமி, மகாசிவராத்திரி, தீபாவளி, வசந்த பஞ்சமி, இரதசப்தமி. ஊசூவின் அப்த பூர்த்தி, கோலிப்பண்டிகை, மராத்தி ஆண்டுப்பிறப்பு. நாகபஞ்சமி". இவை மராத்தியர் ஆட்சி அலுவலர் விதித்த பட்டியல். இவற்றினிடையே புகுந்து தேடிப் பார்த்தால் பொங்கல் விழா தென்படவில்லை. புத்தாண்டு மராத்தி ஆண்டாகப் பளிச்சிடுகிறது. -

இவற்றினிடையே நாகை நகரமும் சுற்றுப்புறமும் பொங்கல் கொண்டாடின; பொன்னேர் பூட்டின. தமக்கென ஒரு தனிப் பாங்கில் நின்றன. நாகைக்கு இஃதொரு பெருமை. அக்கரையகரங்கள் பெருக்கம்

மராத்திய மன்னர்களில் குறிப்பிடத்தக்காரில் முதல்வராகிய பிரதாபசிங்கின் பெருமையாக இன்றும் நாகூர் மனோராக் கல்வெட்டில், .

"பசுக்களையும், அந்தனர்களையும் காப்பாற்றுகின்றவரான (ரீ சீரீமத் சத்ரபதி மகாராசராச (ரீ) சிரீ பிரதாப சிம்ம மகாராசா சாகேப் அவர்கள்" என்றுள்ளதைக் காணலாம். இவர் மட்டுமல்லர்; ஏகோசி தொடங்கி, சிவாசி வரை அனைவரும் பார்ப்பனர்களைக் குடியிறக்கி அக்கரையகரங்களை (அக்ரகாரம்) உருவாக்கினர். தஞ்சையைச் சுற்றிப் பள்ளியக்கரையகரம், கணபதியக்கரையகரம் என்ப் பலவற்றைக் காணலாம். தமிழர்களை அப்புறப்படுத்தி அங்கே அக்கரையகரங்களை அமைத்தனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/106&oldid=584988" இலிருந்து மீள்விக்கப்பட்டது