பக்கம்:நாகப்பட்டினம்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆட்சி நாகை 89

அன்னோர் ஆட்சியில் மராத்தி, வடமொழி இவற்றுடன் அவ்வப்போது தமிழ் ஆட்சி மொழிகளாகவும் சில காலம் தெலுங்கு ஆட்சி மொழிகளில் ஒன்றாகவும், உருதும் கையாளப்பட்டன. ஆவணங்களிலும் செப்பேடுகளிலும் 'கவில், சாகீர், அவுல்தார் முதலிய சொற்களே காணப்படும்.

நாகையின் பார்ப்பனச் சேரி உள்ளது. இது சங்க காலத்திலேயே அங்கு ஓடிய ஆற்றின் அக்கரையில் வந்திறங்கியோர் சேரி அமைத்துத் தங்கியதாகும்.

மராத்தியர் ஆட்சியில் தஞ்சையில் பெருகியது போல் நாகையில் அக்கரையகரம் அமைக்கப்படவில்லை.

மராத்தியர் ஆட்சி, அவ்வினத்தாரது வாழ்வியல் வளம், ஆட்சிக் களம், மன்னரது சிற்றின்பப் பெருக்கம், வடமொழிச் சார்புடைய சமயப் பெருக்கம் எனவே அமைந்தது. மனைவியர் வெள்ளம்

அம்மன்னரது மனைவியர் பற்றிய விவரம் தலைநடுக்கம் தருவதாகும். ஒருவர் கூட ஒருத்தியுடன் வாழவில்லை. ஒரு சில எடுத்துக்காட்டுகள்.

மராட்டிய வீர சிவாசிக்கே எட்டு மனைவியர் என்று தொடங்கும் இது தமிழ் மண்ணில் புகுந்து மன்னரான ஏகோசிக்கு அரசித் தகுதியில் மனைவியர் மூவர், காமக்கிழத்தியராகச் சேர்த்துக் கொள்ளப்பட்டவர் ஒன்பது மனைவியர் (12) என விரியும். அரசித் தகுதி உள்ளோர் முறைப்படி மன்னர் தாலிகட்ட மணம் கொண்டவர். காமக் கிழத்தியர் கத்திகட்டித் திருமணம் கொண்டவர். மணமகனான மன்னரின் கத்தியை மணவறையில் வைத்து அதற்கு மணமகள் மாலையிட ஒரு கட்டுக்கழுத்தி தாலி அணிவிப்பாள். இவர்களையன்றி மணம் பெறாது மன்னருக்கென இருந்த வைப்புகளும் இருந்தனர்.

பெயர் பெற்ற பிரதாப சிங்குக்கு அரச மனைவியர் மூவர். காமக் கிழத்தியர் எழுவர். (13)

புகழ்பெற்ற சரபோசிக்கு அரச மனைவியர் ஐவர். காமக் கிழத்தியர் பதின்மூவர்.(14) -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/107&oldid=584989" இலிருந்து மீள்விக்கப்பட்டது