பக்கம்:நாகப்பட்டினம்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆட்சி நாகை 109

செல்லும் சாலை ஆலந்துச் சாலை (Holand Road)எனப்பட்டது. இஃது இப்போது நேத்தாசி சாலை என்று மாற்றப்பட்டுள்ளது. இன்றும் மீனவ இனத்து முதியவர்கள் இதனை ஒல்லாந்தர் தெரு என்று வழங்குவதுண்டு.

இதுகொண்டு இச்சாலையில் அந்த நாள்களில் ஆலந்து நாட்டு ஆட்சி அலுவலர்கள் இடம் பெற்று வாழ்ந்தனா எனக் கொள்ளலாம். இங்கொரு பழமையான திருச்சபைக் கோயிலும் உண்டு. இவ்வகையில் இச்சாலை தன் பழம் பெயரால் ஆலந்துக்காரரின் ஒரு சின்னமாக உள்ளது.

கொடி மரத்து மேடை

மேலும் ஆலந்துக்காரரின் குறிப்பிடத்தக்க இரண்டு சின்னங்கள் உள்ளன; மூன்றும் உள்ளன. ஒன்று கொடி மரத்து மேடை.

கடலில் வரும் மரக்கலங்களுக்குக் கரை காட்டிக் குறிப்பீடு களைத் தரக் கொடி காட்டப்படும். இதற்காக ஆலந்து ஆட்சி நிறுவனத்தார் ஒரு மேடையைக் கடற்கரையில் எழுப்பினர். இதற்கு இன்றும் கொடிமரத்து மேடை என்றே பெயர். இது கடற்கரையை ஒட்டி ஒடும் உப்பனாற்று மேல்கரையில் அமைக்கப்பட்டுள்ளது. கடல் - மட்டத்திலிருந்து 20 அடி உயரங் கொண்டது. வடக்கு தெற்காகக் கிழக்குப் புறத்தில் 113 அடி நீளமும், மேற்குப் புறத்தில் ஆ10 அடி நீளமும், கிழக்கு மேற்காக வடபுறத்தில் 123 அடி அகலமும், தென் புறத்தில் 123 அடி அகலமும் கொண்ட மேல் தளத்தை உடையது.'

இம்மேடைக் கட்டுமானம் நீண்ட 21/2 அடி தடிப்புச் சுவர்களாக எடுக்கப்பட்டுச் சுவர்களின் இடையில் மண் நிரப்பப்பட்டு எழுப்பப் பட்டது. மேடை மேல் தளத்தில் 3 அடி உயரத்தில் 40 அடி விட்டம் கொண்ட வட்ட வடிவ மேடை ஒன்றுள்ளது. இது கொடிக்கம்பம் நாட்டப்படும் மேடையாகும். -

இப்போது இக்கொடிமரத்து மேடை பொதுப் பூங்காவாக நாகை நகராட்சியால் பொறுப்பேற்று நடத்தப்படுகிறது. நாகை மக்கள் மாலையில் கொடி மரம் இல்லாமலே மேடையில் வீசுகின்ற மெல்லிய

1. இந்த அளவுகளை எடுத்து வழங்கியவர் புலவர் இரா. இராமதாசு (அந்தணப்பேட்டை) அவர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/127&oldid=585009" இலிருந்து மீள்விக்கப்பட்டது