பக்கம்:நாகப்பட்டினம்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i Ti {} நாகபட்டினம்

பூங்கடற்கரைக் காற்றுடன் வலிய வீச்சுக் காற்றையும் ஏற்று வருகின்றனர். .

இக்கொடிமரத்து மேடை ஆலந்துக்காரரின் ஒரு சின்னம்.

6xios! isjöö6;s

இரண்டாவது சின்னம் ஆளுநர் வளமனை (Governer Bunglow)

நாகையைக் கைக்கொண்ட ஆலந்தர் தமக்கென ஒர் ஆளுநர் வளமனையை எழுப்பினர். இப்போதுள்ள தென்னிந்தியத் திருச்சபை மேல்நிலைப் பள்ளியின் தெற்கில் இன்றும் உள்ளது. அதன் சுவர்க் கட்டுமானத்தைக் கொண்டே இது பழமையானது எனலாம். இங்கு அமர்ந்து ஆளுநர்தம் ஆளுகையை நடத்தியுள்ளார். (இவ்வளமனையிலும் இன்று பள்ளி வகுப்புகள் நடைபெறு கின்றன.)

ஆலந்து ஆட்சியின் வரலாற்றுச் சின்னமாக இதனையும் கொள்ள வேண்டும். v. சுரங்கப்பாதை

இந்த வளமனையில் ஏறுவதற்குப் படிக்கட்டுகள் கொண்ட அகல ஏறுவழி உள்ளது. இப்படிக்கட்டின் முதற் படியை ஒட்டி இரண்டு அடிக்குக் கீழே நிலத்திற்குள் ஒரு சுரங்கப்பாதை தொடங்குகிறது. இச்சுரங்கப்பாதை 6 1/2 அடி உயரமுடையது. 5 அடி அகத்தில் மேல் கூரை வளைவு மண்டப அமைப்பைக் கொண்டது. இது கிழக்கு நோக்கிச் சென்று கொடி மரத்து மேடைக்குச் சற்று தெற்கில் மேலேறுவதாக முடிகிறது. கப்பலில் வந்து இறங்கும் ஆளுநரும், அவர்தம் குடும்பத்தாரும் இதன் வழியாக வளமனையை அடைந் தனர் போலும். -

1978 இல் தென்னிந்தியச் திருச்சபை மேல்நிலைப் பள்ளிக்குக் கூடைப்பந்து ஆட்டத்தளம் தோண்டியபோது இச்சுரங்க வழி தென்பட்டது. குடைவு வழி உப்பு மண் போட்டு அடைக்கப்பட் டிருந்தது. இதனை நான் கண்டுள்ளேன்.

எனவே, இதனை நினைவுச் சின்னத்தின் மூன்றாவதாகக் குறிக்கலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/128&oldid=585010" இலிருந்து மீள்விக்கப்பட்டது