பக்கம்:நாகப்பட்டினம்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 நாகபட்டினம்

ஆளுநர் பணியே பின்னர் மாநிலங்களை ஆளும் ஆளுநர் அமையத் தோற்றுவாயாயிற்று. இந்நிறுவனத்தார் பையப்பைய ஆனால் உறுதியாகக் காலூன்றி வணிகத் துறையிலேயே சென்னப் பட்டினத்தை விலைக்கு வாங்கினர். அதன் கடற்கரையில் வணிக வாய்ப்பும், ஆட்சி எதிர்நோக்கும் உடைய கோட்டையைக் கட்டினர். அக்கோட்ட்ைக்குச் செயிண்டு சியார்சுக் கோட்டை (St. George Fort) என்று தம் முத்திரைப் பெயரிட்டனர். ஆட்சிக் கால்கோள் -

இந்திய அரசியலில் விளையாடினர். பிரித்தாளும் சூழ்ச்சி, இந்திய மன்னர்களைக் கைக்குள் வைக்கும் திறன் முதலிய இவற்றால் இந்நிறுவனமே கோட்டைகள் கட்டியும், படைகள் அமைத்தும் வளர்ந்தது. 1773 இல் இந்தியாவின் வணிக முழுமைக்கும் ஒர் ஆளுகைத் தலைவர் (Viceroy) அமர்த்தப்பட்டார். 1858இல் வணிக நிறுவன ஆட்சியை மாற்றிச் சில ஆங்கிலர் இந்திய ஆட்சியை ஏற்றனர். இந்தியாவில் கிளைவின் போராட்ட வெற்றியால் ஆங்கில அரசு தன்னை நிலைப்படுத்திக் கொண்டது.

நாட்டைப் பல மாநிலங்களாகப் (Provinces) பிரித்து ஒவ்வொன் றையும் ஆளுகை அரசாக்கி (Government) அதற்கு ஒவ்வோர் ஆளுநரை ஆட்சித் தலைவராக்கியது.

இவ்வகையில் சென்னை மாநில அரசின் ஆளுநரின் கீழே தஞ்சை மாவட்டத்தின் நாகை ஆளத் தலைப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வரி தண்டுவதற்காக ஒவ்வொரு தண்டலர் (Collector) பணியமர்த்தப்பட்டார். அவர் மாவட்ட ஆட்சித் தலைவ ராய் நாகை ஆட்சியாளர் ஆனார். அவரும் அக்காலத்தில் வெள்ளை பராகவே அமர்ந்தார். இன்றைய நிலையிலும் அந்த மாவட்ட ஆட்சியர் அமைப்பு நீடிக்கிறது.

நாகையில் இவ்வாறு ஆங்கிலர் ஆட்சி கால்கோள் கொண்டது. உள்ளாட்சி முறை

ஆங்கிலர் தமிழ்நாட்டுச் சோழ மன்னரது - அவரிலும் குறிப்பாக இராசராசன் ஆட்சி முறைகளைக் கண்டறிந்தவர். ஏறத்தாழ அவற்றை ஒட்டியும் தம் நாட்டு முறைகளைக் கருத்தில் கொண்டும், தம் பிடிப்பு அகலாத வகையில் ஆட்சி முறையை வகுத்து நடைமுறைப்படுத்தினர். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/132&oldid=585014" இலிருந்து மீள்விக்கப்பட்டது