பக்கம்:நாகப்பட்டினம்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆட்சி நாகை 113

இது சொல்லும் செய்தி யாது? பல குறிப்பிடத்தக்க பொருள்களை ஆலந்தார் கைப்பற்றி எடுத்துச் சென்றுள்ளனர். ஆனைமங்கலம் வருவாய்களை மாற்றித் தாம் கைக்கொண்டதாலோ மாற்றம் செய்ததாலோ அன்றி வேறு எக்காரணத்தாலோ இதனை எடுத்துச் சென்றுள்ளனர். நாகை நகரின் தென்மேற்கில் கருவையாற்றங்கரையில் கார்முகேசர் கோயில் என்றொரு சிவன் கோயில் இருந்தது. அக்கோயிற் பகுதி நிலம் இவர்கட்கு வேண்டியிருந்ததால் அக்கோயில் திருவுருவங் களை அகற்றச் செய்து நிலத்தைக் கைப்பற்றிக் கொண்டனர். இது இவரது மற்றொரு திருவிளையாடல்.

இவற்றால் அன்னார் நாகையில் ஆற்றிய பணிகள் எத்தகையன என அறியலாம். ஆலந்துக்காரர்களோ கலையான கல்லறை மண்டபம் ஒன்றை அன்பளிப்புச் சின்னமாக வைத்துச் செப்பேட்டை 'இலெய்டன் செப்பேடு என்று பெயர் பெறுமாறு எடுத்துச் சென்று ஆனைமங்கலம் செப்பேடு என்ற அதன் பெயரையும் மறைத்தும் விட்டனர்.

போர்த்துகீசியர் நாகைக்குத் தம் அன்பளிப்புச் சின்னங்களாகக் கல்லறைகளை விட்டுச்சென்றனர். அன்னார் ஆட்சிக்குக் கல்லறை கண்ட ஆலந்துக்காரர் தம் அன்பளிப்புச் சின்னங்களில் கல்லறை மண்டபம் ஒன்றை விட்டுச் சென்றனர். அன்னார் ஆட்சிக்கு ஆங்கிலேயர் கி.பி. 1824 இல் கல்லறை தந்தனர். 3. ஆங்கிலேயர் ஆட்சி (1824 - 1942)

மேலை ஐரோப்பியர் கிழக்கிந்தியப் பகுதிகளில் வணிகம் செய் வதற்காகக் கிழக்கிந்திய வணிக நிறுவனங்களை (கம்பெனிகளை) உருவாக்கினர். அவற்றுள் கி.பி. 1600இல் இங்கிலாந்தின் முதல் எலிசபெத் அரசியார் ஆட்சியின்போது நிறுவப்பட்ட ஆங்கிலக் கிழக் கிந்திய வணிக நிறுவனமே குறிப்பிடத் தக்கதாக நீண்டகால உயிர் கொண்டது.

இந்தியாவில் வணிகம் கருதிப் புகுந்த இந்நிறுவனத்தார் வணிகத்தோடு அவ்வப்போது கிறித்துவ சமய நெறியாளராகவும் குடியேறினர்.

1612 இல் இந்திய சூரத்தில் ஒரு பண்ட சாலையை நிறுவினர்; அதற்கொரு ஆளுநரைப் (Governor) பணியமர்த்தினர். இந்த 「BrT.a.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/131&oldid=585013" இலிருந்து மீள்விக்கப்பட்டது