பக்கம்:நாகப்பட்டினம்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 12 - நாகபட்டினம்

இவ்வுடன்பாடே ஆலந்தர் ஆளுமையைக் கீழைக் கடற்கரையி லிருந்தும் அதன் தலைமையிடமான நாகையிலிருந்தும் அகற்றிற்று. ஆலந்து (டச்சு) ஆட்சி நாகையில் முடிவுற்றது. ஆலந்தர் செயல்கள் -

ஆக கி.பி. 1657 முதல் 1824 வரை 165 ஆண்டுகள் நாகை ஆலந்துக்காரர் பிடியில் இருந்தது. இப்பிடியில் நாகை பெற்ற நன்மை என்று குறிப்பிட்டுச் சொல்ல முன்னே கண்ட நினைவுச் சின்னங்கள் தவிர வேறு ஒன்றும் இல்லை எனலாம்.

பொதுவாகவே மேலை நாட்டினர் இந்தியாவைத் தம் வேட்டைக் காடாகத்தான் கருதினர். கையாண்டனர். அவருக்குள்ளும் ஆலந்து டச்சுக்காரர் பற்றி வரலாற்றாசிரியர், "டச்சுக்காரர்கள் தம் ஆட்சியிலுள்ள மக்கள் நலத்தைக் கருதாது, தம் வணிகப் பெருக்கத்திலேயே நாட்டமாயிருந்தனர்" (24) என்பர். இக்காலத்தில் பிரித்தானிய ஆளுநராகச் சென்னையில் இருந்தவர் ஆபர்ட்டு பிரபு (Lord Hobert).

இந்த வணிக வேட்டை நாகையில் நிறைவாகவே நடந்தது. இவர்கள் நம்நாட்டிலிருந்து கொண்டு சென்ற ஒன்றைக் குறித்தாலே அவர்களது வணிக வேட்டை மட்டுமின்றி கொள்ளை கொண்ட நிலையும் விளங்கும்.

நாகையில் கீழை நாட்டரசரால் சூளாமணி விகாரை கட்டப் பட்டதை அறிந்தோம். அதற்குச் சோழமன்னர் இராசராசனும், மகன் இராசேந்திரனும் நாகைக்கு அண்மையிலுள்ள ஆனைமங்கலம் என்னும் சிற்றுரையே அறக் கட்டளையாக்கினர். அதற்கு நிலைத்த ஆவணமாகச் செப்பேடு ஒன்றையும் ஆக்கினர். அதன் பெயர் ஆனை மங்கலம் செப்பேடு செப்புத் தகட்டால் ஆனதுதான் அது. பெரும் கலைப் பொருள் என்று சொல்ல முடியாது. ஆன வரலாற்றுப் பதிவேடு. அதன் பெயராக இப்போது கல்வெட்டறிஞர் களாலும் வரலாற்றாசிரியர்களாலும் குறிப்பிடப்படுவதும், பதியப் படுவதும், வழங்கப்படுவதும் இலெய்டன் செப்பேடு சன்பதாகும்.

இலெய்டன் ஆலந்து நாட்டினுள் ஒரு நகரம், ஆலந்துக்கார ஆளுநர் ஒருவர் தஞ்சையிலிருந்தோ, நாகை சூளாமணி விகாரையி லிருந்தோ இச்செப்பேட்டைக் கைப்பற்றி எடுத்துச் சென்று இலெய்டனில் வைத்தார். பல்லாண்டுகள் அங்கிருந்ததால் 'இலெய்டன் செப்பே'டாயிற்று. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/130&oldid=585012" இலிருந்து மீள்விக்கப்பட்டது