பக்கம்:நாகப்பட்டினம்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆட்சி நாகை # 5

மக்கள் நேரடியாகத் தொடர்பு கொள்ள மாவட்டக் கழகங்களை (District Boards) அமைத்து அவற்றில் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டோரைக் கருத்துரையாளராகக் கொண்டு, தம் வெள்ளை அலுவலர் ஒருவரை ஆணையராக (Commissioner) வைத்து அவர் ஆணைப்படி மாவட்ட நடவடிக்களை மேற்கொண்டனர். இதனால் மாவட்ட மக்களுக்கும் பொது வாழ்வு நலன்கள் பல அமைந்தன. இம்மாவட்டக் கழகமாகிய தஞ்சை மாவட்டக் கழகத்தால்தான் நாகை நகர்க்குக் குடிநீர்க் குழாய் அமைப்பும், கழிவு நீர் ஓடச் சாக்கடைத் திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டன. நாகை நகராட்சி

இவ்வாறான உள்ளாட்சி அமைப்பில் நகரங்களுக்கும் சிற்றுார்களுக்கும் நகராட்சிகளையும் (Municipalities) ஊராட்சி களையும் (Panchayats) அமைத்தனர். நாகை நகரமும் ஒரு நகராட்சி நகரமாயிற்று.

நகராட்சி என்னும் சொல் முனிசிபாலிட்டி என்னும் இலத்தீன் சொல்லுக்கு அமைக்கப்பட்ட சொல். முனிசிபாலிட்டி என்னும் சொல்லுக்கு மேலை நாட்டில் உரோமாபுரி நகருக்கும் சிற்றுார்களுக்கும் இடையே இருந்த ஆட்சி உறவு' என்பது பொருள். இப்பொருள் பொருந்தாமையால் நகரத்தின் நலன்களைச் செய்யும் நகரத்திற்குரிய ஆட்சி என்னும் பொருள் கொண்டு நகராட்சி என்னும் சொல் அமைந்தது. ஆனாலும் முனிசிபாலிட்டி என்பதன் ஆங்கில மூலப்பொருள் போர்ப்படை அல்லது வாணிகச் சிறப்பு வாய்ந்த ஆட்சி என்பதாகும். இப்பொருள் முழுமையும் நம் நகராட்சி களுக்குப் பொருந்தாது போயினும் "நாகை" பழங்காலமுதல் வணிகச் சிறப்பு வாய்ந்த நகரம் என்னும் அளவில் அமைக்கப் படாத பொருத்தமாக உள்ளமை ஒரு நயமாகும்.

நாகை நகராட்சி 1866ஆம் ஆண்டு தோன்றியது. ஆங்கில ஆட்சியர் அமர்த்திய அலுவலரை நகர ஆணையாளராகக் கொண்டு 19ஆண்டுகள் செயற்பட்டது. 1885இல் நகரத்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பெற்ற உறுப்பினர்களைக் கொண்ட நகராட்சி அவை அமைந்தது. உறுப்பினர்களால் நகராட்சித் தலைவராக முதல் முதலில் தேர்ந்தெடுக்கப்பெற்ற திரு. சி.வி. சுயம்பு ஐயர் முதலாக 1976 வரை திராவிட முன்னேற்றக் கழகக் கட்சியினரான திரு. ஈசுவரி தலைவராக அமைந்தனர். இது வரை 110 ஆண்டுகளில் 23

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/133&oldid=585015" இலிருந்து மீள்விக்கப்பட்டது