பக்கம்:நாகப்பட்டினம்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நகரமைப்பு நாகை 12.5

அத்துடன் தமிழ் மொழியைக் காணாது, தமிழ் நூல்களைக் காணாமையும் ஆகும். முதன்மை நாகரிகம்

முதல் ஊழிக் காலக் கடல்கோளில் தென்பெருங் கடலில் பெருநிலப்பகுதி மூழ்கியது. அப்பகுதி 'குமரி நாடு எனப்பெறும். குமரி நாட்டில் ஒடிய பஃறுளி ஆற்றங்கரையில் தோன்றிய பழந் தொன்மை நாகரிகம், கண்காணும் தடயங்களைக் காட்டாமையால் அது மறைபொருள் ஆயிற்று. -

பஃறுளியாற்றங்கரை நாகரிகமே உலகத்தில் முதன்மை நகர நாகரிகமாகும்.

முற்கால அளவில் இந்திய நாட்டில் காவிரிக்கரை நாகரிகமும், கங்கைக் கரை நாகரிகமும் சிந்தாற்றங்கரை நாகரிகமும் தோன்றின. காவிரி, கங்கை நாகரிகங்கள் ஒன்றிற்கொன்று பலதுறைகளில் வேறுபட்டவை; முரண்பட்டவையுமாகும். -

காவிரிக்கரை நாகரிகத்தின் கிளையே நாகை நகர நாகரிகமு மாகும். -

தொன்மைக்கால நகரத் தோற்றம் சிந்து நாகரிகம் என்று வழங்கப்பெறும் நாகரிகம் சிறந்த நாகரிகமே. சிந்து நாகரிகம் என்னும் தொடரில் உள்ள இரண்டு சொற்களும் நாகை நகர நாகரிகத்தை ஒத்து அணுகுகின்றன.

முதலில் நாகரிகம் என்னும் சொல் நாகர்+இகம் என்று பிரிபடும். இது "நாகரிகர்" என்னும் சொல்லின் திரிபாகும்.

"நஞ்சும் உண்பர் தனி நாகரிகர்"(1) என்னும் நற்றினைப் பாடலில் நாகரிகர் என்றதற்குநாகரியர் என்னும் பாடவேறுபாடு உண்டு. இச்சொல் நர்கர்+இ+அர் என்பவற்றின் கூட்டுச்சொல்.

இதற்குக் காப்பியர்' என்னும் சொல்லும் ஒப்பானதாகும். காப்பு +இ+அர் என்பதன் கூட்டு காப்பியர்' காப்பியாறு என்னும் ஒர் யாறு தொன்மைக் காலத்து யாறு. அது காப்பு+யாறு என்று 'ஊருக்குக் காப்பான யாறு என்று பொருள்படும் (காப்பு+யாறு = காப்பியாறு என்று ஆவதை இலக்கணத்தார் குற்றியலிகரம் என்பர்). காப்பியாற்றுக் கரையிலிருந்த ஒர் ஊர் காப்பியாறு என்றே பெயர் பெற்றது. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/143&oldid=585025" இலிருந்து மீள்விக்கப்பட்டது