பக்கம்:நாகப்பட்டினம்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நகரமைப்பு நாகை 週35

இவ்வமைப்பு இப்பேருரின் தோற்றக் காலக் கட்டத்துடன் தொடர்ந்து நேர்ந்த காலக்கட்ட அமைப்பாகும். இருப்பினும், பெயர் மாறும் அளவு நேர்ந்தமையால் அஃதொரு தனி அமைப்பாகக் கொள்ளத் தக்கதாகும்.

ஈ. பட்டின அமைப்பு

ஓர் ஊறுபாட்டாலும் (விபத்தாலும்) நம் தொன்மை நாகை விரிவாக்கம் பெற்றதென்றேன். மற்றொரு கடிய அழிவால்தான் துறைமுகப் பட்டினம் ஆயிற்று பெருநகரமுமாயிற்று. அந்தக் கடிய அழிவு பூம்புகார் கடற் கொந்தளிப்பால் நேர்ந்ததாகும். இக் கொந்தளிப்பும் அழிவும் எப்போது நேர்ந்தன?

ஒரு வரலாற்றாசிரியர் (7) கி.பி 79 ஆகட்டு 23, 24 ஆம் நாள்களில் நேர்ந்ததாகக் குறித்துள்ளார். இக்கணிப்புக்குரிய சான்றுகள் தெளிவாக இல்லை. பிளினியின் குறிப்புகளைக் கொண்டு கூறப்பட்டதாகத் தெரிகிறது. பிளினியின் காலம் கி.பி. 23 முதல் 79 வரை. அவரது இறுதியாண்டில் நேர்ந்ததாக உள்ளது.

இஃது ஒரளவில் அமையுமாயினும் இக்கொந்தளிப்பால் புகார் நகரின் ஒரு பகுதி சிதைந்ததாகவோ மூழ்கியதாகவோ குறிக்கப்படு கிறது. பின் முழு அழிவும் கி.பி. மூன்றாம் நூற்றாண்டு என்று குறிக்கப்படுகிறது. இஃதும். ஓர் அரை நூற்றாண்டு அளவு பிற்படுகிறது. இவையிரண்டையும் ஒரளவில் ஏற்றால், முதல் அழிவைக் கண்ட சோழ மன்னன் எதிர்காலத்தை எண்ணிப் புகார் நகருக்கு மாற்றாக ஒரு துறைமுகத்தைச் சோழ நாட்டிற்காக அமைக்க விரும்பியிருக்கக் கூடும். அதற்குப் புகாரின் தெற்கே ஓரளவில் அமைப்பாக இருந்த நாகையே அதாவது பதரிதிட்டா என்னும் நீர்ப்பெயற்றே தக்கதாக இருந்தது. - <R

எனவே, சோழ மன்னன் கி.பி. முதல் நூற்றாண்டின் இறுதியளவில் அங்குத் துறைமுகம் கண்டு அதற்கேற்பப் பட்டினம் அமைக்கவும் முனைந்திருக்க வேண்டும். அதன் விளைவு, வரலாறுகள் ஏற்கும் நாகர்பட்டினத்தை உருவாக்கியது. பூம்புகாரின் மறு அச்சுவார்ப்பு

அவ்வுருவாக்கமும் அஃதாவது பட்டின நகரமைப்பும் புகார் நகரம் போன்றே அதன் மாற்று வடிப்பாகவே அமைக்கப்பட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/153&oldid=585035" இலிருந்து மீள்விக்கப்பட்டது