பக்கம்:நாகப்பட்டினம்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 3 . நாகபட்டினம் -

இடத்தில்"விருத்த காவிரி" என்னும் ஆறு ஓடியதாகக் குறித்துளளார். அதுபற்றிய உரிய இடத்தில் காணலாம் என்றும் முன்னர் குறிக்கப் பெற்றதன்றோ? அவ்வுரிய இடம் இவ்விடமாகிறது. அப்புராணத் திலுள்ள கார்முகேசப் படலத்தில்,

"நிருதி ஆசையிற்புகா ஒரு விருத்த காவிரி" (9) என்று பாடியுள்ளார். நிருதி ஆசை என்றால் தென்மேற்கு மூலைத்திசை, இதிற் புகுந்து பாய்ந்த விருத்த காவிரி என்று பொருள். சிந்தாறு தெற்கு முகமாகத் திருப்பி விடப்பட்டதைக் கண்டோம். அந்த ஆறு தெற்கே பாய்ந்து தென்மேற் கெல்லையில் திரும்பிய இடத்தில் ஒரு கோயில் அமைந்தது. அது 'கார்முகேசம் என்னும் சிவன்கோயில்,

இதைப்போன்றே பிள்ளையவர்கட்கு முன் வாழ்ந்த அழகு முத்துப் புலவர் (17 ஆம் நூற்றாண்டு) என்பார் நாகைக் குமரக் கடவுள் மேல் திறப்புகழ்' என்று ஒரு நூலைப் பாடியுள்ளார். அதில்,

"மிகுந்த காசியின் மாநதி போலவும் வடக்கு மாதிர மேல்முக மாய்வரு "விருத்த காவிரி சூழ் திருநாகை" (10) - என்று விருத்த காவிரி' குறிக்கப்படுகிறது. குடகு மலையில் தோன்றிய பொன்னிக் காவிரிக்கு முன்னர் தோன்றியது இக்காவிரி என்று புராணங்கள் கூறும். இது வடக்குத் திசையிலிருந்து (தெற்கே) பாய்ந்ததாகவும் குறித்துள்ளார்.

வடமொழிப் புராணத்தின்படி சிவபெருமான் அருளால் இக் காவிரி தோன்றியதாகும். அஃதும் இவ்வெல்லையிலேயே தோன்றிய தாகும். இதனால் குடகில் தோன்றிய பொன்னிக் காவிரிக்கும் முந்திப் பிறந்த மூத்த காவிரி என்னும் கருத்தில் விருத்த காவிரி எனப்பெற்றது. .

மற்றுமொரு கதை உண்டு. நாகமன்னன் நாகையிலுள்ள நாகநாதர் கோயில் கடவுளிடம் நாகையில் வளம் பெருக ஆறு ஒன்று பாய வேண்டி நின்றான். கடவுள் நாகநாதர் அருளால் தோன்றிய இந்த ஆறு (11) விருத்த காவிரி எனப்பெற்றது. மற்றொன்றையும் இங்கே கொள்ள இடம் கிடைக்கின்றது. திருப்பிவிடத்தொடங்கியதி லிருந்து நகருக்குள் பாய்ந்த போது சிந்தாறு என்று பெயர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/158&oldid=585039" இலிருந்து மீள்விக்கப்பட்டது