பக்கம்:நாகப்பட்டினம்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நகரமைப்பு நாகை 155

அதிலும் வணிக நகராக, அதனிலும் பன்னாட்டு வணிக நகராக விரிந்தால் அந்நகரைச் சுற்றி மக்கள் குடியிருப்புகள் அமைந்து அங்கங்கு ஊர்கள் உருவாவது ஒரு பெரிய நகரமைப்பின் துணை அமைப்புகளாகும். நாகையைச் சுற்றிலும் அதனை ஒட்டியனவாகப் பத்து ஊர்கள் அமைந்தன. அவற்றையும் சுற்றி ஆங்காங்கு தனித்தனி ஊர்கள் உருவாயின. நாகர்பட்டினத்து எல்லைகளில் வடக்குத் தொடங்கிக் கடற்கரையோரமாகவும் தெற்கிலும் தென்மேற்கிலும், வடமேற்கிலும் வடக்கிலுமாகப் பல்வகை ஊர்கள் பெருகின. அவை எவ்வாறு ஒரு பெருநகரத்தின் துணை அமைப்புகளாகும் என்பதை அவ்வவ்வூர்களின் பெயர்களே அடையாளங் காட்டுகின்றன.

நாகை நகர்க்கு மேற்கில் 4 கி. மீட்டரில் சிக்கல் என்றொரு சிற்றுார் உருவாயிற்று. இதன் வளர்ச்சியும் நாகை நகர்க்கு ஒரு துணை அணியாயிற்று.

மக்கள் கூடி வாழும் வளாகமாம் ஊர் என்னும் பொருளைத் தரும் சொற்களாக நிகண்டுகள் 56 சொற்களைப் பட்டியலிட் டுள்ளன. அவற்றுள் தமிழ்ச் சொற்கள் 44. இவற்றுள் 25 சொற்களை அதாவது ஊர்ப் பெயர்களை நாகை நகர் தன்னிடத்தும் தன்னைச் சுற்றிலும் பெற்றுத் திகழ்வது ஒரு சிறப்பான நகர் அமைப்பாகும்.

எ. ஊர்ப் பெயர்களின் பெட்டகம்

கடற்கரை ஒரு கோடாக அதன் தெற்கிலிருந்து தொடங்கி நக வளைவாக நாகைகைச் சூழ்ந்து சுற்றியுள்ள ஊர்ப்பெயர்களைக் காண்பது மேலே சொன்ன அமைப்பைக் காண்பதாகும். ஊர்ப்பெயரும் அதிலுள்ள ஊர் என்னும் பொருளைத் தரும் சொல்லும் கீழ்வருகின்றன. கடற்கரை வடக்கிலிருந்து தெற்கே வந்து நகரை நக வளைவாகச் சூழ்ந்திருக்கும் அமைவுகள்.

ಜf೦೧uut ஊர்ச்சொல் நாகூர் (நாகர் ஊர்) - ஊர் பார்ப்பனச் சேரி - சேரி நம்பியார் நகர் - நகர் ஆரிய நாட்டுச் செட்டித் தெரு - தெரு அக்கரைப் பேட்டை - பேட்டை

கீச்சான் குப்பம் - குப்பம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/173&oldid=585054" இலிருந்து மீள்விக்கப்பட்டது