பக்கம்:நாகப்பட்டினம்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊ. சோழகுலவல்லி பட்டினம்

இவ்வாறு பெருவளாகமாகத் தனியொரு பேரூர் போன்று இடமகன்றிருந்தாலும் முதல் குலோத்துங்க சோழன் (1070 - 1118) காலத்தில் இவ்வளாகத்தின் வடபகுதியிலிருந்த வெட்ட வெளியில் சில குடியேற்றங்கள் அமைந்தன. அரசருக்குப் போரில் உதவப் பயிற்சிபெற்ற பாளையக்காரர்கள் இங்கு குடியேற்றப்பட்டனர். அதனால், இப்பகுதி வெளிப்பாளையம் எனப்பெற்றது. வெளிப் பாளையம் விரிவடைந்தது. கிழக்குக் கடற்கரையில் படகுத் துறைகள் அமைந்தன. முதற் குலோத்துங்கன் இப்பகுதியையும் நாகபட்டினம் என்னும் பட்டினக் கூற்றத்துள் அடங்கிய ஒரு பட்டினப்பகுதி யாக்கினான். இதற்குத் தன் பட்டத்தரசி பெயரால் "சோழகுலவல்லி பட்டினம்" என்று பெயரிட்டான். இப்பதிவையும் செப்பேடும், கல்வெட்டும் அறிவிக்கின்றன. "பட்டினக் கூற்றத்துச் சோழகுலவல்லி பட்டினம்" என்றுள்ளதால், இது வெளிப்பாளையம் உள்ளிட்ட புத்தவளாகம் பகுதியைக் குறிக்கும் நாகபட்டினத்தை அன்று.

தொடர்ந்து இந்தப் புத்த வளாகப் பகுதியிலேயே சைவ சமயத்தாரும் இடம் பெற்றனர். சிவன் கோயிலும் அமைந்து நாளடைவில் இக்கோயிலும் சுற்றுப்புற நான்கு தெருக்களையும் பெற்றது. வைணவக் கோயிலும் அமைந்தது. புத்த வளாகம் அமுங்கத் தொடங்கியது.

வடக்கில் நாகூரில் மரக்கல அரையராக இடம் பெற்ற முகமதியர் குடியிருப்புகள் பெருகின. கடலில் படகுத் துறையும் அமைந்தது. முகமதியக் குடியிருப்புகள் கிழக்குக் கரைப்பகுதியிலேயே அமைந்தன. முன்னே நாகையில் தொடங்கிய காரைக்கால் சாலை நாகூர் வழியே சென்றது. அச்சாலையில் கிழக்குப் பகுதியில் முகமதியர் இடம் பெற்றது போன்று மேற்குப் பகுதியில் தமிழ் மக்கள் குடியிருப்புகள் அமைந்து அங்குச் சிவன் கோயிலும், பெருமாள் கோயிலும் அமைந்தன. சுற்று விதிகளும் அமைந்தன. நாகூர் விரிவடைந்தது. படகுத் துறை வணிகத் துறையாகவும் பெருகியது. மக்கள் மொய்த்த நகரம்

இவ்வகையில் நாகூரையும் அடக்கிய நாகர்பட்டினம் தன் வளாக - எல்லையில் ஒரு நிறை நகராக ஆனது. ஒரு நகர் நிறை நகராக,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/172&oldid=585053" இலிருந்து மீள்விக்கப்பட்டது