பக்கம்:நாகப்பட்டினம்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

} õ{} - நாகபட்டினம்

கூத்தாடும் ஆடற் கலைஞர்க்கு வழங்கப்பட்டது நிருத்தண்மங்கலம், புத்தர்களுக்கும் மங்கலங்கள் அமைந்தன. புத்த சமயம், 'புத்தம் - சங்கம்- தன்மம் என்றும் மூன்று கோட்பாட்டுப் பணித்துறைகளைக் கொண்டது. இவ்வகையில் புத்த சமயத்தார் ஊர் புத்தருர் - புத்துனர் எனப்பெற்றது. புத்த சங்கத்துக்கு வரியின்றி வழங்கப்பட்ட ஊர் 'சங்க மங்கலமாயிற்று. -

அரிஞ்சிமங்கலம் என்றொரு சிற்றுார் உள்ளது. இதன் முழுக்காரணம் புலப்படவில்லை. அழிஞ்சில் என்பது ஒரு மரம். அம்மரமிருந்த ஊர் மங்கலமாகியதால் இப்பெயர் பெற்றிருக்கலாம். பழைய பத்தூர் என்று வெற்றிப்பட்டயம் குறிக்கும் பத்தூர்களில் இஃதும் ஒன்று. அப்பட்டியலில் அழிஞ்சிலா மங்கலம் என்றுள்ளது. இது நாகையில் வடமேற்கில் உள்ள ஊர். புரவர் சேரி -

நாகைக்கு மேற்கில் திருவாரூர்ச் சாலையில் சிக்கலை ட்டியதாகப் பொரவச்சேரி என்றொரு ஊர் உள்ளது. வைணவத் திருமங்கையாழ்வார் சூளாமணி விகாரையிலிருந்த பொன்னாலான புத்தர் சிலையைக் கவர்ந்து இவ்வூரில் பொதிந்து வைத்திருந்ததாக, அதனால் இது பொருள் வைத்த சேரி என்று பெயர் கொண்டது என்பர். பழைய பத்துார்களில் ஒன்றான இஃது அப்பட்டியலில் பொருவளச் சேரி என்றுள்ளது. தோட்டம், புரவு முதலியவற்றுக் குரியவர் புரவர் எனப்படுவர். அன்னார் கூடிவாழ்ந்த சேரியாகலாம். எவ்வாறாயினும் மக்கள் சேர்ந்து வாழ்ந்த ஊர் இது. இது போன்றே திட்டர் (திட்டை ஆக்குவோர்) சேர்ந்து வாழ்ந்த ஊர் திட்டர் சேரியாற்று. திட்டை என்னும் மேட்டுநிலத்தில் சேர்ந்து வாழ்ந்த இடத்தில் திட்டைச்சேரி யாகியிருந்தலும் கூடும்.

நாகர்பட்டினம் நாணயக்காரத்தெரு மருந்துக் கொத்தளத்தெரு, வெளிப்பாளையம், காடவர்கோன்பாடி, கோட்டை வாயில்கள் ஆகிய இவற்றின் பெயர்க்காரணங்களை ஆங்காங்கே அறிந்தோம்.

யானைகட்டி முடுக்கு

யானை கட்டி முடுக்கு என்றொரு பகுதி தெருப் பெயருடன் நகரின் நடுவில் உள்ளது. நாகை துறைமுகமானது முதல் யானைகள் இறக்குமதியாயின. சேக்கிழாரும், "கரிபரித்தொகை சொரிவதாம் கலத்தால்" என்று பாடினார். ஆனால், பல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/178&oldid=585059" இலிருந்து மீள்விக்கப்பட்டது