பக்கம்:நாகப்பட்டினம்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நகரமைப்பு நாகை 1.59

வாழ்ந்த ஊராக இருந்திருக்கும். அந்தணப்பள்ளி (26) அந்தணச் சேரி என்றெல்லாம் அந்தணர் வாழிடம் முற்காலத்தில் வழங்கப் பெற்றது. பேட்டை என்ற பெயர் இல்லை. பேட்டை சிறு வணிக இடம்: அங்காடி கூடும் இடம். அந்தணர் பேட்டையாகாது. ஆனால் மன்னரிடம் பிரமதேயம் என்று அறக்கட்டளையாக ஊரைப் பெற்ற அந்தணர் - பார்ப்பனர் பின்னர் அதனை விற்றும் வந்தனர். இதனை, -

"ரீமது அம்மாபேட்டை அசேழ மகா சனங்க ளனைவரும் (அந்தணர் - பார்ப்பனர்கள் அனைவரும்) தாராசுரத்திலுள்ள ஞானப்பிரகாச பத்தருக்கு நந்தவன தர்மத்துக்கு நிலம் விலைக்கிறைய சாத் (ச)னம் பண்ணிக் குடுத்தபடி" (27) என்று ஒரு செப்பேட்டில் காண்கிறோம்.

இவ்வாறு முன்னர் தமக்கு மன்னரால் வழங்கப்பட்ட தம் வாழ்வூரை அந்தணர்கள் பின்னர் போர்த்துகீசியரிடம் அங்காடிப் பேட்டைக்காக விற்றிருப்பர். தூய அந்தோனியர் பெயராலோ வேறு ஒரு வாணிக அந்தோனியர் பெயராலோ பேட்டை அமைத்து அந்தோனிப்பேட்டை எனப் பெற்றது. படேவியா வெள்ளிப் பட்டயம் குறிக்கும் நாகையைச் சேர்ந்த "பழைய பத்துனர்களில் இஃதும் ஒன்று. அதில் அந்தோனிப்பேட்டை" என்றே குறிக்கப் பெறுகிறது. இப்பெயர் மாற்றம் ஐரோப்பியர் வருகைக்குப் பின்னர் கி. பி. 1650 அளவில் நேர்ந்திருக்கும். பேட்டை என்பதற்கு -9վհԾյէ- այPI հrTւf,րTՅ: இன்றும் அங்காடிக்கடைகளும், L|l-ങ്ങഖ്, கடைத்தெரு என்றொரு தெருவும் உள்ளன. அந்தோனியை விரும்பாதோர் பழம் பெயரை நினைவு கூர்ந்து அந்தணப்பேட்டை யாக்கியுள்ளனர். புகை வண்டி நிலையமும் அந்தணப்பேட்டை' என்றே உள்ளது.

மங்கலங்கள் -

மன்னர்களால் பார்ப்பனர்க்கும் கலைஞர்க்கும் கோயில் களுக்கும் புலவர்கட்கும் சான்றோர்க்கும் வரியில்லா நிலமாக வழங்கப்பட்ட நன்செய் ஊர்கள் மங்கலங்கள் என்று பெயர் பெற்றன. இம்மங்கலங்கள் நாகையைச் சுற்றிலும் உள்ளன. சிவனடியார்க்காக வழங்கப்பட்ட மங்கலம் அடியார் மங்கலம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/177&oldid=585058" இலிருந்து மீள்விக்கப்பட்டது