பக்கம்:நாகப்பட்டினம்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 நாகபட்டினம்

இதனை ஒரு தனிக்காலக் கட்டமாகக் காண,

1. நேர்ந்த மாற்றம்

2. அதன் தொடர்பான குடியமைப்பு

3. புறநகர் ஒன்று உருவானது

4. சுற்றுச் சாலை ஒரு புதுப்படைப்பு

5. ஐரோப்பியரால் அமைப்புகள் - எனும் ஐந்தும் காரணமாயின.

பதரிதிட்டையாகத் தொடங்கி வளர்ந்து புத்த வளாகமாகப் பரந்த புத்த சமயம், தொய்வடையத் தொடங்கியது. இத்தொய்வின் முன்னறிவிப்பாக எட்டாம் நூற்றாண்டளவில் திருமங்கைமன்னன் புத்த விகாரத்துப் புத்தர் பொற்சிலையைக் களவாடியதைக் கொள்ளலாம். அதன்பின்னர் சூடாமணி விகாரை எழுப்பப்பெற்று அதற்கு இராசராசனும், முதல் இராசேந்திரனும் வழங்கிய பள்ளிச் சந்தமாகிய ஆனைமங்கலம் அறக்கொடை சில அறக்கொடைப் பெருச்சாளிகளால் குலைந்தது. கடாரத்து மன்னன் முதற் குலோத்துங்கன்பால் தூதனுப்பவேண்டி அறக்கட்டளையைச் செயற்படுத்தினான். இந்நிகழ்ச்சி புத்த சமயத் தொய்வின் மறு அறிகுறியாகும். -

தொடர்ந்து நாகையில் சைவம் சிறப்பாகத் தலைதூக்கியது. தாம் சென்று பாடும் இடங்களில் புத்த, சமண அமைப்புகள் இருப்பின் அவற்றைச் சாடிப்பாடிய திருஞானசம்பந்தரும், திருநாவுக் கரசரும் நாகையில் வந்த போது அவ்வாறு ஊர் குறித்துப் பாடவில்லை. அப்போது புத்தக்களம் சிறப்பாகவே இருந்தமை அதனை அணுக வேண்டாத சூழலை அவ்விருவர்க்கும் தந்திருக்கலாம்.

ஆனால், முன்னே கண்டபோது வெளிப்பாளையம் சோழகுலவல்லிப்பட்டினமாகிப் பாளையக்காரர் குடியேற்றம் புத்த வளாகத்திலும் புகுந்தது. அதன் வளர்ச்சியாக மெல்ல மெல்ல பொதுவான மக்களும் சைவத்தாரும் ஏற்படுத்திய தாக்கத்தால் சூளாமணி விகாரை உட்பட ஒவ்வொன்றாக மறையும் நிலை நேர்ந்தது. புத்த வளாகத்தின் மேற்கு எல்லையிலே ஒரு பெருமாள் கோயில் எழும் அளவு தொய்ந்தது. 5 அடுக்காக அமைந்த புதுவெளிக் கோபுரம் சிதைந்து கவனிப்பாரற்றுப் போயிற்று. இது புத்தக்களம் நாகையில் தேய்ந்து ஓய்ந்ததன் சான்றான அறிவிப்பாகும். அதே ஆண்டில் நாகையில் இயேசு சபையார் புது வெளிக்கோபுரத்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/180&oldid=585061" இலிருந்து மீள்விக்கப்பட்டது