பக்கம்:நாகப்பட்டினம்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. மக்கள் நாகை

அ. நல்ல நிலம்

அவ்வையார் நிலத்தை அழைத்தார். "நீ நல்லை" என்று ஒரு சான்றுரை தந்தார். அதனையும் ஒரு விதிப்புடன்தான் தந்தார். எவ்வகையில் ஆண்மக்கள் நல்லவர்களாக உள்ளனரோ அவ்வகையில் "நீ நல்லை" என்பதை,

"எல்வழி நல்லவர் ஆடவர்

அவ்வழி நல்லை வாழிய நிலனே' (1) என்று வாழ்த்திப் பாடினார்.

திருவள்ளுவப் பெருந்தகையோ சற்றுக் கடுமையாகவே "பண்புடையவர் வாழ்வதனாலேயே உலகியல் ஒழுங்காக நடை பெறும்; அந்தப் பண்புடைமை இல்லையென்றால் உலக நடை முறைகளே மண்னில் புகுந்து அழிந்து போகும்" (2) என்றார்.

பண்புடையவர் எத்தகையவா எவற்றைச் செய்வார்? இவற் றிற்குக் கடலுள் வாய்ந்த இளம்பெருவழுதி என்ற மன்னர் விடை தந்துள்ளார். -

மிக இனிமையானதாக இருந்தாலும் தாம் தனித்து உண்ண

山pffL_L-IT事;

எதிலும் வெறுப்பு கொள்ளமாட்டார்;

சோம்பல் கொள்ளார்;

பிறர் அஞ்சுவதற்குத் தாமும் அஞ்சுவார்;

புகழுக்கு உயிரையும் கொடுப்பார்:

பழி என்றால் உலகமே பரிசானாலும் கொள்ளார்;

மனச்சோர்வு கொள்ளார்:

பிறர்க்கெனவே முயற்சிப்பர். இவர்களால்தான் உலகமே நிலைத்துள்ளது (3) என்றார். -

உலகத்தில் இவர்களைக் கொண்ட பல நகரங்களும் உள்ளன. அப்பட்டியலில் நாகை நகரமும் இடம் பெற்றதாகும். இதனைப் பல

வழிகளில் காணலாம். ஆயினும் ஒரு வழிக்காக ஓர் எல்லை கொண்டு காண்போம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/186&oldid=585067" இலிருந்து மீள்விக்கப்பட்டது