பக்கம்:நாகப்பட்டினம்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11.சோனகர் எனப்பட்ட இசுலாமிய மக்கள்

மேற்கு நாடாகிய அரேபியாவிலிருந்து வணிகம் கருதிக் கடல் வழியாகத் தமிழகம் வந்தவர் சோனகர் எனப்பட்டனர். கடல் வழியாகவே இலங்கை சென்று கீழைக்கடற்கரை நகரங்களில் வணிகம் நடத்தினர். சிறப்பாக இடம் பெற்றனர். யவனர் (அயோனியர்)

இவர்களைச் சங்க இலக்கியங்கள் யவனர்' என்று சிறப்பித்துப் பேசுகின்றன. அயோனியர் என்பார் அயோனியத் தீவினர். இன்னோர் கிரீசு வழியினர். இவர்கள் அரபு நாட்டுத் தொடர்பினர். ஒருவகையில் அக்குடியின் சார்பினர். அயோனியர் கட்டடக் கலையில் தூண்கள் உயரமானவை; தூணின் மேற்பகுதியில் நான்கு பக்கமும் சுருட்டி விட்டது போன்ற கலையமைப்பு கொண் டவை. இவ்வகைத் தூண்கள் திருமலை நாயக்கர் மாலிலும் பிற இடங்களிலும் காணப்படுவது அயோனியரை நினைவு படுத்தும். அரேபியராக நம் நாட்டை அடைந்தோரின் அறிமுகமாக அயோனியர் இடம் பெற்று அப்பெயரால் யவனர்' எனப்பட்டனர் போலும்.

ஜாவா, சாவா (யாவா) ஆகி அஃதும் அகம் என்னும் சொல் பெற்றுச் சாவகம் ஆனது போன்று அயோனியர் சோனர் ஆகி அஃதும் அகம் பெற்றுச் சோனகம் ஆகியது. இருப்பினும் குறிப்பாக அரேபியரையே குறிக்கும்.

சங்க இலக்கியங்களில் யவனர் கல்ைகளாக அன்ன வடிவ விளக்கு (பெரும்பாண் 367), கலைத்திறமை மிக்க கப்பல் (அகம். 149) குறிப்பிக்கப்பட்டன. அம்மக்கள் துருக்கர் என்று அடியார்க்கு நல்லார் (சிலம்பு. 14 - 67) குறித்தார்.

அன்னார் வன்மையான உடலினர். யவனர் அடல்வாள் யவனர் கடிமதில் வாயில் காவலிற் சிறந்த யவனர்; மரக்கல யவனர் எனப்பெற்றனர். அவர்கள் வாழ்ந்த இடம், பயன்அறவு அறியா யவனர் இருக்கை (சிலம்பு 5-10) எனப்பெற்றது. இந்த இருக்கை பூம்புகாரில் இருந்தது. இதன்படி புகார் அழிவிற்குப் பின் அந்த யவனர் நாகையில் இடம் பெற்றிருப்பர்.

அரேபியாவின் பேரீச்சை, பார்லி, பொன் முதலியவை நாகையில் இறக்குமதியாயின. அவ்வணிகம் நடந்தது. கப்பலில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/203&oldid=585084" இலிருந்து மீள்விக்கப்பட்டது