பக்கம்:நாகப்பட்டினம்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 நாகபட்டினம்

காண்பதே "எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை" என்னும் அவ்வையார் வாய்மொழியைக் காண்பதாகும்.

இ. நாகை மக்களின் தொன்மையும்

சான்றாண்மையும்

வாழ்தரத் தாங்கும் நாகை

மாந்தரது தொன்மையைக் கற்கால அளவாகக் கொண்டு காண்பர். அஃது அவ்வந்நிலத்தில் கிடைக்கும் பழம்பொருளாம் சின்னங்களைக் கொண்டு கணிக்கப்படும். அப்பொருள்களில் "முது மக்கள் தாழி" ஒன்று. -

நாகையை அடுத்த பூவத்தடி என்னும் பிரதாபராமபுரத்தில் நிறைய முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ளன; இன்றும் உள்ளன. அத்தாழிகளில் உள்ள எலும்புகள் அன்னார் பயன்படுத்திய பொருள்களைக் கொண்டு அவர்கள் இரும்பைப் பயன்படுத்திய வர்கள் என்றறிய முடிகிறது. இரும்பைப் பயன்படுத்திய மாந்தர் "பெருங்கற்கால மாந்தர்" எனப்படுவர். இவர் காலம் 2500 ஆண்டு களுக்கு முற்பட்டது. எனவே, கிடைத்துள்ள பொருள் அளவைக் கொண்டு நாகை மக்கள் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட த்ொன்மை யானவராவர். இக்காலக் கணக்கு ஒரு கீழ் எல்லைதான்.

புலவர் ஏறு மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் நாகை நகரை, "யாரையும் வாழ்தரத் தாங்கும் தன்மை மேயது நாகபட் டினத்திரு நகரம்" (19) என்று பாடினார். நாகை மக்கள் தம் நகரை நாடி வந்த 18 நாட்டாரை மட்டுமன்றி 18 குடிமக்களையும் வரவேற்றுப் போற்றின்ர். வந்தாரை வாழவைக்கும் நாகைப் பெருமக்கள் பலவகைச் சான்றோராகவும் பொதுமக்கள் அளவில் பலர்க்கும் உதவி புரிபவராகவும் திகழ்ந்தனர். துன்புற்றோர்க்கு உதவுவதில் பெருமனம் படைத்தவர் என்பதை ஒரு பாடல் விளக்குகின்றது:

தமக்குத் தீமை செய்தவராக இருப்பினும் ஒத்த மனத்துடன் உதவினர். தன் உறுப்பை அறுத்தெடுத்துத் தீயின்கண் போடும் அளவு தீமை செய்தவராயினும் அவர்க்கும் ஒத்த மனத்தால் வாழ்ந்தனர்.

என்பதை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/210&oldid=585091" இலிருந்து மீள்விக்கப்பட்டது