பக்கம்:நாகப்பட்டினம்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கள் நாகை - • ‘ 2{}莎

நாகை நகரையே தம் வாழ்வுத் திருவிடமாகக் கருதி வந்தோர் பலர், இங்கேயே குடியமர்ந்து உழைத்து வாழ்ந்து நாகையையும் வளப்படுத்தினர்.

எ. பெயர் பொறித்த பெரியோர்

முற்காலந்தொட்டுப் பெருமக்கள் பலர் சிறப்புற வாழ்ந்து நாகை நகரையும் சிறப்பில் நிறுத்தினர். 19, 20 ஆம் நூற்றாண்டுகளில் குறிப்பிடத்தக்கோரை இங்கு சுருக்கமாகவேனும் பதிவது நூலாசிரியர் கடமையாகும். .

பெருமக்கள் பலவகையினர். ஆங்கிலேயர் ஆட்சியில் பெருஞ்செல்வராகவும் செயற்கரிய செய்தோராகவும் இருந்தோரைப் பாராட்டி மதிக்க விரும்பிய ஆட்சியர் அத்துடன் அவரைத் தம் கைக்குள் வைத்துக் கொள்ளும் உள் நோக்குடன் 'சர்', 'இராவ் பகதூர், திவான்பகதூர், கான்பகதூர், ஆனரபிள் முதலிய விருதுகளை வழங்கினர். அவ்வாறு விருதுகளைப் பெற்றோராக நாகை மக்களும் திகழ்ந்தனர். அவருள் சிலரையும் பிற பெருமதிப்பிற்குரியார் சிலரையும் இங்கு குறிப்பிட நாகை நகராட்சித் தலைவராயிருந்தோர் என்னும் எல்லையை வைத்துக்கொண்டு சுருக்கமாகக் காண்போம். .

நாகை நகராட்சியின் முதல் தலைவர் திரு.சி.வி. சுயம்பு ஐயர் 1.4.1885 முதல் 21.9. 1885 வரை. திரு எஃப். ஆலிவர் (இருமுறை) 22.9.1885 - 2.3.1886; 21, 4, 1892 - 2, 3, 1896. -

ஆனரபில் ஆர். இரத்தினசபாபதிப் பிள்ளை (இருமுறை) 22.8.1. 886 - 20.4.1892; 4, 11, 1895 – 12.7.1902.

இராவ்பகதூர் கே.எஃச் வேங்கடராமய்யர் இருமுறை) 13.2.1908 - 27, 6. 1914; 26.4.1917 - 24.9.1918.

ஆனரபிள் கான்பகதூர், சர் ஏ.டி, மரைக்காயர் (இருமுறை) 25.8.1916 - 3,12.1917; 25.9.1920 – 12.12.1924,

திரு. வே.ப, பக்கிரிசாமிபிள்ளை (இருமுறை) 19.2.1924 - 10.5.1924; 24.8.1924 - 30.10; 1924. - -

-- " -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/223&oldid=585104" இலிருந்து மீள்விக்கப்பட்டது