பக்கம்:நாகப்பட்டினம்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 {} {} . r நாகபட்டினம்

இன்று வாழ்வோரில் திருமதி இராசம்மாள் தேவதாசு அவர்கள் கல்விப் பேரறிஞர். கோவை அவிநாசிலிங்கம் செட்டியார் பல்கலைக் கழகத்தில் துணை வேந்தராகத் தொடர்ந்து இருந்து கல்விப்பணி புரிபவர். தமழ்நாட்டில் குறிப்பிடத்தக்க காந்தியக் கல்வி அறிஞர்.

திரு இலட்சுமண நாயுடு காங்கிரசு பேரியக்கத் தொண்டராக நாட்டு விடுதலைப் படையில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டிருப்பவர். நாகை மக்கள் அண்ணாச்சி என்று அன்புடன் அழைத்து மகிழும் வணிகத்திரு அ.து. செயவீரபாண்டிய நாடார் கல்விப் பெரு வள்ளல். தொடக்கக் கல்வி முதல் கல்லூரி வரை கல்வி நிறுவனங் களைத் தோற்றுவித்துத் தம் வருவாயை ஈடுபடுத்தி வருபவர். ஏற்றுமதி இறக்குமதி வணிகத்தில் 20 ஆம் நூற்றாண்டுக்குச் செம்மல்,

இசையுலகில் புகழ் நிறுத்தி வரும் இசை முரசு நாகூர் அனிபா தென்னகத்திலும் வட நாட்டிலும் திரையுலகிலும் கீழை நாடுகளிலும் முரசு கொட்டும் இசைத் தோன்றல். கணிர்க் குரலே இசைமுரசு எனக் காட்டும்.

நாட்டு மேனிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள திரு. ,ே பாலசுப்பிரமணியம் சாரண இயக்க நற்பணி யினர். பொது நிகழ்ச்சிகளில் தோய்ந்து நிற்பவர். ஏறத்தாழ எண்பது அகவைக்குச் செல்லும் இவர் "S.B' என்பதற்கு ஏற்ப (Yes: Bee) ஆம் தேனியாக வாழ்பவர்.

இத்தகு பொதுநிலைச் சான்றோருடன் தமிழ்ப் புலமைச் சான் றோராக வாழ்ந்தோர் பலர்." -

ஏ. நாகையில் பாராட்டுச் சின்னங்கள் நாகை ஈன்ற - போற்றத்தக்க பெருமக்கள் பலர். அவரை நாகை நகர மக்கள் மதித்து அவ்வப்போது பாராட்டு நினைவுச் சின்னங் களை நிறுவினர். இன்றும் அச்சின்னங்களை நாகையில் வாழ் வோர் அன்றன்று கண்டு மகிழ்கின்றனர். நகர்க்கு வருவோரும் கண்டு உவக்கின்றனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/226&oldid=585107" இலிருந்து மீள்விக்கப்பட்டது