பக்கம்:நாகப்பட்டினம்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமய நாகை 221

"சமணரும் புத்தரும் திருமால்பற்றிப்

பொறுப்பரியன பேசினால்" "குறிப்பெனக் கடையுமாகில்

கூடுமேல் தலையை ஆங்கே அறுப்பதே கருமம்" (5) என்று தலையறுக்கவும் முனைப்பு கொண்டு பாடினார்.

நாகைக்கு வந்த திருமங்கை மன்னன், "போதியார் என்றிவர் ஒதும் கள்ள நூல்கள்" என்று பாடினார். களவு செய்தே தம் திருப்பணியைச் செய்த அவர் நாகையில் நாகானை விகாரையில் இருந்த புத்தரது பொன் சிலையைத் திருடிக் கவர்ந்தார். இதுகொண்டு திருவரங்கம் கோயிலுக்கு மதிற்கவர் எடுத்தார். இச்செய்தியைத் திருமாலிய நூலான 'குருபரம்பரைப் பிரபாவம்' என்னும் நூலே குறித்துள்ளது. (6)

புத்தப் பொன்சிலையைப் பார்த்த திருமங்கையாழ்வார் ஒரு பாடலும் பாடியுள்ளார். .

"ஈயத்தால் ஆகாதோ? இரும்பினால் ஆகாதோ?

பூயத்தான் மிக்கதொரு பூதத்தால் ஆகாதோ?

தேயத்தே பித்தளையால் செம்புகளால் ஆகாதோ?

மாயப்பொன் வேணுமோ மதித்துன்னைப் பண்ணுதற்கே", என்று பழித்துப் பாடிய பாடலைத் தனிச் செய்யுட் சிந்தாமணியில் காண்கிறோம். அவர் பாடியதோ: அன்றோ? அவர் பொன்சிலை திருடியதை அபிதான சிந்தாமணி (பக்கம் 845) இவ்வாறு சொல் கிறது: "நாகப்பட்டினத்துப் பெளத்தர் கோயிலில் செல்வமிருக் கின்றதாகக் கேள்விப்பட்டு அங்குச் சென்று அதற்குக் காவலாகச் சுழன்று கொண்டிருந்த சக்கரத்தை, வாழை மரத்தைச் சக்கரத்தில் கொடுத்து நிறுத்தி, சுவர்ண பெளத்த விக்ரகத்தை உருக்கித்திருமதில் முதலிய கைங்கர்யம் செய்வித்து". - இதுகொண்டு பொன் புத்தருக்குக் காப்பாக ஒர் ஆழி சுழன்றதாக அறியமுடிகிறது.

பொன் சிலையைத் திருடியமை திருடியவரின் களவுத்திறத்தை அறிவிப்பதுடன் அதுபற்றிய தடைகளோ பின் நடவடிக்கையோ இல்லாமற் போனமை புத்தர்க்கு நகரத்தாரின் கவனம் கிடைக் காததையும் குறிக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/239&oldid=585120" இலிருந்து மீள்விக்கப்பட்டது