பக்கம்:நாகப்பட்டினம்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 - நாகபட்டினம்

நூற்றாண்டுகளின் ஓட்டத்தில் அசோகன் எடுத்த விகாரையும், பின்னர் எழுந்த நாகானை விகாரையும் பழுதுபட்டு அழிந் திருக்கலாம். ஒரு பொன்மலை

பின்னர் எழுப்பப்பெற்ற சூளாமணி விகாரையும், புதுவெளிக் கோபுரமும் சிறப்பாகக் குறிக்கப்படுகின்றன.

சூளாமணி விகாரையைப் பற்றி இலெய்டன் சிறிய செப்பேடு சிறப்பாக விளக்கியுள்ளதைக் கண்டோம்.

அச்செப்பேட்டில், "உலகத்துக்குத் திலகம் போன்றது" என்றும் "நாகபட்டினத்தில் தன் உயரத்தால் கனக கிரியையும் சிறியதாகச் செய்து, என்றும் அழகினால் வியப்படையச் செய்கின்ற சூளாமணி விகாரை" என்றும் விவரிக்கப் பெற்றுள்ளமை இதன் சிறப்பை உணர்த்துகின்றது. -

இதற்கு அறக்கட்டளையாக மன்னன் இராசராசனும் பின்னர் இராசேந்திரனும் ஆனைமங்கலம் ஊர் நிலத்தை வழங்கினர், சில ஆண்டுகளே இவ்வறக்கட்டளை செயற்பட்டது. குலோத்துங்கன் காலத்தில் ஆனைமங்கலம் வருவாய் இவ்விகாரைக்குக் கிடைக்க வில்லை. இதற்கு சிரீவிசய நாட்டு மன்னன் இரு தூதுவரை அனுப்பிக் குலோத்துங்க மன்னனிடம் முறையிட, அவன் உதவி கிட்டுவதற்கு உதவினான் என்று முன்னரும் கண்டோம்.

தடைபட்ட உதவியைப் பெற இங்கிருந்த புத்தத் துறவிகளால் இயலவில்லை. நகரத்தில் உள்ள மக்களைக் கொண்டு முயற்சிக்க லாம். அவ்வாறும் செய்யவில்லை. மக்களில் எச்சான்றோராகிலும் முன் வந்து முனைந்திருக்கலாம்; இல்லை. வெளிநாட்டு மன்னன் முயன்றுள்ளான். - - - .

இந்நிலையும் நாகையில் புத்தம் மக்கள் சார்பற்று இருந்தது' என்பதைக் காட்டுவதுடன் புத்தத்திற்கு நாகை மண்ணில் ஒர் இறக்கநிலை நேரத் துவங்கியது என்பதையும் காட்டுகின்றது.

13ஆம் நூற்றாண்டில் நாகைக்கு வந்த மார்க்கோபோலோ நாகையில் சிலகாலம் தங்கினார். அவர்தம் குறிப்பில் நாகையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/240&oldid=585121" இலிருந்து மீள்விக்கப்பட்டது