பக்கம்:நாகப்பட்டினம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரலாற்று நாகை 7

திரும்பிய தோழி கடற்கரைக்கு வந்தாள். காத்துக் கிடந்த ஏவலர் செய்தியறிந்தனர். ஒருவனைத் தவிர மற்றவரிடம் இச்செய்தி ஏதும் புதுமையான வியப்பை ஏற்படுத்தவில்லை. அரைகுறையாகப் புரிந்த ஒருவன் சொன்னான்:

அரசிளங்குமரி பிறந்த நாளில் கணி சொன்னது உண்மை யாகிவிட்டது. ஒன்றும் புரியாதவன் கேட்டான்:

என்ன சொன்னான் கணி? இதையா அப்பொழுதே சொன்னான்? அரைகுறை சொன்னான்: "ஒ நீஅப்போது சிறுவன். 'இப்பெண்குழந்தை எதிர்காலத்தில் பருவம் அடைந்ததும் சோழகுல மன்னன் ஒருவனால் கூடப்பெற்று அங்குத் தங்காது மீள்வாள் - என்றான்.

எல்லாம் புரிந்த மூன்றாமவன் முடித்துப் பேசினான்: கணி சொன்னதால் மட்டும் இது இப்போது நடந்து விடவில்லை. இந்தச் செய்தி மறைத்து வைக்கப்பெற்ற செய்தியன்று; பீலிவளை அறியுமாறும் அவ்வப்போது பேசப்பட்டு வந்ததே! நாளொரு மேனியாய் அவள் வளர்ந்த போது இந்த எண்ணமும் பொழுதொரு வண்ணமாய் அவள் உள்ளத்தில் வளர்ந்து வந்தது. இவ்வாண்டு வந்து விட்டாள்; நடக்கின்றது. அஃதிருக்கட்டும் எப்பொழுது அரசிளங்குமரி - இல்லை. இல்லை அரசி மீள்வாளோ? என்று வினவினான்.

தோழி கைகளை விரித்தாள். ஒருவன் எப்படியானாலும் தாய்த்தன்மையுடன்தான் வருவாள்' என்று கிண்டலாக ஒர் உண்மையையும் சொல்லி வைத்தான். வரவை எதிர்நோக்கிக் காத்திருந்தார்கள். புகார்க்குள் செல்வதும் மீள்வதுமாகக் கலத்தை ஒட்டினர்.

ஒரு திங்கள் கழிந்தது. ஆணித்திங்களின் தொடக்கத்தில் ஒரு நாள் அந்தி மாலை நேரம் திடீரென்று பீலிவளை விரைந்து ஓடி வந்தாள். மரக்கலத்தில் ஏறத் துடித்தாள் ஏறினாள். மரக்கலம் விரைந்து இங்கு வந்தது. இடையில் ஒன்றுதான் கூறினாள். மன்னர் பட்டினத்திற்குள் சென்றுள்ளார். அந்த நேரம் பார்த்து வந்தேன். வந்தால் விடமாட்டார்; விரைவில் கலத்தை விடுங்கள் என்றாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/25&oldid=584907" இலிருந்து மீள்விக்கப்பட்டது