பக்கம்:நாகப்பட்டினம்.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமய நாகை 235

புதுமை. சில பிள்ளையார் பெயர்கள் நயமானவை. கரையான் பிள்ளையார், காக்கா பிள்ளையார் (காக்கும் பிள்ளையார்), ஏழைப் (எல்லை) பிள்ளையார் சம்மட்டி (சம்பங்கோரை)ப் பிள்ளையார்; பெரிய கோயிலுக்குள் இரண்டு பிள்ளையார் ஒருவர் மாவடிப் பிள்ளையார், மற்றொருவர் ஐந்து முகப் பிள்ளையார்.

இவையன்றித் தனி அம்மன் கோயில்களாக நெல்லுக்கடை மாரி யம்மன் கோயில், வெளிவை முத்து மாரியம்மன் கோவில், மாகாளி யம்மன் கோயில், திரெளபதியம்மன் கோயில், அங்காள பரமேசுவரி யம்மன் கோயில், வேப்பிலைக் காளியம்மன் கோயில், அபிராமி யம்மன் கோயில் முதலிய 20 கோயில்கள் உள்ளன. இவை யெல்லாம் திருநீறு வழங்குவன. ஆகையால் சிவன் கோயில்களே. சைவத் தலைநகர்

அனைத்துக் கோயில்களையும் சேர்த்தால் நாகையில் சைவ சமயக்கோயில்கள் அறுபதுக்கு மேல் உள்ளன. தெருவிற்கு ஒரு கோயில் எனலாம். சில தெருக்களில் இரண்டு, மூன்று. நான்கும் உள்ளன. வேறு எந்த நகரமும் இத்துணைக் கோயில்களைக் - கொண்டதன்று. மிகப் பெரிய நகரங்களில் இருக்கலாம்.

எனவே நாகை நகர் சிவராசதானி (சைவத் தலைநகர்) எனப் புகழ் பெற்றது. ஆட்சி வகையில் தலைநகராக இருந்ததில்லை என்றாலும் சைவ சமயத்தால் இது தலைநகரம் ஆயிற்று.

இக்கோயில்கள் அனைத்துமே நாகை நகரின் கிழக்குப் பகுதியில் இல்லை. நாகையிலும் நாகூரிலும் நாகை நாகூர்ச் சாலை யின் கிழக்குப் பகுதி இசுலாமிய மக்கள் வாழும் பகுதி பெரும்பகுதி. ஆதலால், இப்பகுதிகளில் சைவ, திருமாலியக் கோயில்கள் இல்லை.

இக்கோயில்களில் முதன்மையாகவும் விவரமாகவும் காணத் தக்கது காரோணர் கோயிலாகும். இது நீலாயதாட்சியம்மன் கோயில் என்றே மக்கள் வழக்கில் உள்ளது. சுற்றிலும் உள்ள நான்கு பெருந் தெருக்களும் நீலா கிழக்கு, நீலா தெற்கு, நீலா மேற்கு, நீலா வடக்கு என்றே பெயர் பெற்றுள்ளன.

1. நாகைத் திருக்கோயில் விவரங்களைத் தொகுத்து உதவியவர் நாகை நண்பர் திரு ப. சிங்காரவேலன் அவர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/253&oldid=585134" இலிருந்து மீள்விக்கப்பட்டது