பக்கம்:நாகப்பட்டினம்.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமய நாகை 237

இங்குப் புகலிடம் பெற்றுத் தங்கினர் என்பதன் அறிகுறியாகும் இஃது என்பர். இவ்வமைப்பொரு தனிச்சிறப்பாகும். ஒன்பது பார்வை ஒரே பார்வையில்

பெருங்கோயில்களில் ஒன்பது கோள்களுக்கும் (நவக் கிரகங்கள்) திருவுருவல் அமைந்திருக்கும். ஒன்பதும் மாறிமாறி நோக்கியிருக்கும். நாகைக் காரோணத்தில் ஒன்பதும் ஒரே முகமாக மேற்குப் பார்வையில் அமைந்து உள்ளமை ஒரு புதுமை. இஃதும் ஒரு சிறப்பாகும். அழகிய தான்தோன்றியர்

மூலவர் அருவுருவினர். இதனை இலிங்கம் என்பர். கரு வறையில் மூலவரின் தென்புறம் சோமாஃச்கந்தர் என்னும், சிவனும் உமையும் நடுவில் முருகப் பிள்ளையை அனைத்திருக்கும் திருக்கோலத் திருவுருவம் இடம் பெற்றுள்ளது. ஸ:சிவன் - உமா - ஃச்கந்தன் (கந்தன்) என்பதே சோமாஃச்கந்தர். காரோணத்திற்கு இஃதொரு சிறப்பு. இதனைத்தான் அழகிய விடங்கர் - சுந்தர 'விடங்கர் என்று புராணம் விவரிக்கின்றது.

முதலில் இந்திரன் தன் வழிபாட்டிற்காகத் திருமாலிடமிருந்து முதல் சோமாஃச்கந்தரைப் இயாகராசரை) பெற்றான் என்றும் அவனுக்கு உதவிய முகுந்தன் இதனை வேண்டினான் என்றும், இதனை இழக்க மனமில்லாத இந்திரன் அதே போன்று வேறு ஆறு திருவுருவங்களைத் தேவகம்மியன் மயனைக் கொண்டு உருவாக் கினான் என்றும் முகுந்தனோ முதல் திருவுருவத்தை அடையாளங் கண்டு பெற்று வந்து திருவாரூரில் தியாகராசராக நாட்டினான். என்றும் கூறப்பட்டுள்ளது. - தொடர்ந்து அவை ஒவ்வொன்றாக மண்ணுலகிற்கு வந்தன. தொடர்ந்து சாலீசுகன் என்னும் மன்னன்தான் பெற்றதைத் திரு நாகையிலும் இவன் குல மன்னன் ஒருவன் பெற்றதைத் திருமறைக் காட்டிலும், ஆரியகுல மன்னன் ஒருவன் திருநள்ளாற்றிலும் ஆரிய மன்னன் மற்றொருவன் திருக்காறாயிலிலும், ஆரிய குலக் காளை ஒருவன் திருவாய்மூரிலும் நாட்டி வழிபாடு நடத்தினர். ஒவ்வொரு ஊரிலும் இவ்விடங்கர் வெவ்வேறு சிறப்புப் பெயர்கள் கொண்டார். நாகை விடங்கர் அழகியவர். எனவே சுந்தரவிடங்கர் என்றனர். பிள்ளையவர்கள்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/255&oldid=585136" இலிருந்து மீள்விக்கப்பட்டது