பக்கம்:நாகப்பட்டினம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 நாகபட்டினம்

தோழி சொன்னாள். அவ்வளவு அன்புள்ளவரானால் நாகநாட்டிற்கே வந்தாலும் வந்துவிடுவாரே.

பீலி, போடி போ! இந்த ஒரு திங்களிலும் நான் யார் என்பதை அறிய முயன்று அவர் தோற்றார் என்று பெருமையடித்துக் கொண்டாள். பேச்சு நின்றது. இங்கடைந்து பாடிவீடுகள் கலங்களில் அடைய விரைந்தடித்துக் கலம் புறப்பட்டது. விரைவில் என்னை அணித்திருந்த தோழியும் மோதியடித்து ஏறினாள். கம்பி ஒன்றில் சிக்கிய நான் உடைந்தேன். கரையில் விழுந்தேன். எனக்காக அவர்கள் பயணம் நிற்குமா என்ன? நான் உடைந்த வளையல். காலப்போக்கில் அலைகளால் தள்ளப்பட்டு இப்பொழுது இங்கு கிடந்து உன் காலால் உதைபட்டேன்.

நான் ஒர் ஐயத்தை எழுப்பினேன். பீலிவளையைப் பிரிந்த மன்னன் என்ன செய்தான் என்பதை அறியாயோ?

வளையல் துண்டு. ஆம்! அதன் பின்னர் அறிந்தேன். காணாத மன்னன் தானே முன்நின்று அவளைத் தேடினான். இப்பகுதிக்குள் வந்தான். இங்கே இருந்த புத்தச்சாரணரைக் கண்டான்: உசாவினான். அவர் கூறினார்:

"மன்ன, நீ குறிப்பிடும் பெண்ணை யார் என்று உணர்கிறேன். இப்போது யான் அவளைக் கானேன். அவளைப்பற்றி அறிவேன். அவள் உன்னிடம் வரமாட்டாள். அவள் வயிற்று நின் மகன் வருவான். இந்நாள் இந்த நினைவை ஒதுக்கி எதிர் காலத்தில் உன் கடமைகளைச் செய்க என்று கூறினார். கடலில் குழந்தை

மன்னன் போனான். நான் கிடந்தேன். பத்துத்திங்கள் கழிந்தன. மறு சித்திரையின் முதல் கிழமையும் வந்தது. ஒரு நாள் நள்ளிரவு. முழு நிலவுக்கு இன்னும் நான்கைந்து நாள்கள் இருந்தன. யாரோ ஒருவன் கடலிலிருந்து கரையேறித் தள்ளாடி நடந்து வந்தான். களைத்தவனாக என் அண்டையில் படுத்தான்.

1. "ஒருமதி எல்லை கடப்பினும் உரையாள்

பொறுவது பூங்கொடி போயினள் அந்நாள்"

- மணிமேகலை 24:42,43.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/26&oldid=584908" இலிருந்து மீள்விக்கப்பட்டது