பக்கம்:நாகப்பட்டினம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரலாற்று நாகை 9

'உயிரோடு தப்பிப் பிழைத்தாயே! அந்தோ கலம் கவிழ்ந்ததா? எந்நாட்டவன் நீ? - என்றேன்.

பெருமூச்சுடன் பேசினான்: நான் பிழைத்தது இருக்கட்டும். அந்தப் பச்சிளங்குழந்தை என்ன ஆயிற்றோ அதற்குப் பொறுப்பேற்று வாங்கி வந்த எம் கப்பல் தலைவர் கம்பளச் செட்டியார் என்ன ஆனாரோ? - என்றான்.

என்ன பச்சிளங் குழந்தையா? என்ன புதிர் போடுகிறாய்? சற்று விளக்கக்கூடாதா? - என்றேன்.

புதுச்செய்தியைக் கூறினான்: - எம் தலைவர் கம்பளச் செட்டியார், புகார் நகரத்துப் பரதவர். கடலோடும் வணிகர். சில திங்களுக்கு முன் வணிகம் கருதிப் பண்டப் பொதிகள் ஏற்றிய பாய்மரக் கப்பலுடன் கடாரத்திற்குச் சென்றோம். எங்கள் தலைவரும் உடன் வந்தார். கீழ்க்கடலில் செல்வோர் செல்லும்போதும் மீளும் போதும் மணிபல்லவத் தீவில் இறங்கி அங்கமைந்த புத்த மேடையை - பீடிகையைத் தொழுவது பழக்கம். கடார வணிகத்தை முடித்துக்கொண்டு பண்டமாற்றாகப் பெற்ற ஆக்கப் பண்டங்களுடன் மீளும்போது மணிபல்லவத்தில் இறங்கினோம். -

"அங்கு நாகநாட்டுப் பீலிவளை எங்கட்கு முன்னரே வந்திறங்கி யிருந்தாள். ஏவற் சுற்றத்தாருடன் ஒர் அழகிய பச்சிளங்குழந்தை இருந்தது. அக்குழந்தை பிறந்து பத்தே நாள்கள் ஆகியிருக்கலாம். அதன் கையில் ஆதொண்டைக் கொடியாலாகிய அணி இருந்தது. அது நாகநாட்டு வளப்பத்தின் அறிகுறி போலும். அக்குழந்தை பக்குவமான பேழையின் உள்ளே அமளி அமைந்த தொட்டிலில் கிடத்தப்பெற்றிருந்தது. -

'எம் தலைவரும் யாமும் புத்த பீடிகையை வணங்கி மீளுங்கால் பீலிவளை எம் தலைவரை அணுகி யாரென்று உசாவினாள். தலைவர் தம்மை அறிமுகஞ் செய்தார். புகார் நகரம் செல்லும் தக்கவர் ஒருவரை எதிர்நோக்கி யிருந்த அவள் அங்கிருந்த பேழையைக் காட்டி இக்குழந்தை சோழமன்னர் நெடுமுடிக் கிள்ளிக்கு உரிய குழந்தை. இதனை அவர்பால் சேர்த்துதவ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/27&oldid=584909" இலிருந்து மீள்விக்கப்பட்டது