பக்கம்:நாகப்பட்டினம்.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 நாகபட்டினம்

அஃதாவது பாம்புலகத்து மன்னன் மகப்பேறு வேண்டிக் காரோ னரை வழிபட்டு மகளைப்பெற்று அவளுக்கு மூன்று கொங்கைகள் இருந்தமையால் கவன்றான்: சோழ மன்னன் ஒருவனைக் காணுங் கால் மூன்றாவது மறையும்; அவனே பாம்புலகம் வந்து மணப்பான் என்பது அக்கதை. அம்மன்னனையே சாலிசுகன்' என்றனர்.

"சாலிசுகன் வடசொல்; புராணப்பெயர். நெடுமுடிக்கிள்ளி தமிழ் வரலாற்றுப்பெயர். கிள்ளி புகாரை ஆண்டவன். நாக நாட்டு இளவரசி பீலிவளை இங்கு வந்தாள். நாககன்னிகை நாகன் மகளும் நாகை வந்தாள். அவள் புகாரில் கிள்ளியைக்கண்டாள்; கூடி னாள். சொல்லாமல் போனாள். நாக கன்னிகை நாகையில் சுகனைக் கண்டாள். மூன்றாவது கொங்கை மறைந்தது. (பீலி வளைக்கு மூன்றாவது இல்லை). வளையைக் காணாது கிள்ளி தேடி னான். சுகன் புற்றுச் சுரங்கம் வழியாக நாகர் நாடாம் பாம்பு உலகம் சென்று மணந்து வந்தான். - -

வரலாற்றைப் புர்ாணம் எப்படிப் பூசும் என்பதற்கு இஃதும் ஒரு சானறு. - -

தனிச்சிறப்புகள்

இக்கோயிலுக்கு ஒரு சிறப்பு உண்டு. இதனைச் சார்ந்து இண்டு துணைக் கோயில்கள் உள்ளன. எந்தச்சிவன் கோயிலிலும் தெட்சணா மூர்த்தி திருவுருவம் கருவறைப் புறச்சுவரின் மாடத்தில் தெற்கு முகமாக இடம் பெற்றிருக்கும். இக்கோயிலில் தனிக்கோயில் கொண் டுள்ளமை ஒரு சிறப்பு. இத்தனிச்சிறப்புச் சட்டைநாதர் கோயிலிலும் உண்டு. -

மற்றொன்று சீதையை மீட்க இலங்கை சென்ற இராமன் இலங் கைக்குப் பாலம் அமைக்கச் சிவபெருமானை வேண்டி வழிபட்ட அரு வுருவம் அமைந்த கோயில் ஒன்று உள்ளது. இஃது இராமநாதர் கோயில் எனப்படும்.

திருநாகைக் காரோண புராணம் நாகங்களின் பெரியோனாகிய ஆதிசேடன் வழிபட்டுக் கட்டிய கோயில் என்று கூறுகிறது.

இக்கோயிலில் அமைக்கப் பெற்ற ஒரு துண்டுக் கல்வெட்டைத் தமிழ்ப்பல்கலைக் கழகக் கல்வெட்டுத் துறை ஆய்வாளர் தி. பி. செயக்குமார் தம் கள ஆய்வில் கண்டுள்ளார்.அஃது ஒரு சிறு அறக் கட்டளையைக் குறிக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/272&oldid=585153" இலிருந்து மீள்விக்கப்பட்டது