பக்கம்:நாகப்பட்டினம்.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமய நாகை 263

சைவ மக்கள்

அனைத்து வகைச் சிவன் கோயில்களாலும் நாகை நகரம் பெரும் பகுதி சைவத் திருநகராகத் திகழ்கிறது. நாகை மக்களிற் பெரும் பகுதியினர் சைவ சமயத்தவர். சைவ சித்தாந்தப் பெரு மக்கள் பலர் வாழ்ந்தனர். சைவ சித்தாந்த திரு வீரப்ப செட்டியார், திரு முத்துக்காயாரோகணம் செட்டியார் போன்றோர் குறிக்கத்தக்கவர். அரசில் பணியாற்றிய மதுரை நாயகம் பிள்ளை என்பார் சைவ சித்தாந்தி. அவர் நகரச் சிவனடியார் வாரவழிபாட்டு மன்றம் அமைத்து ஞாயிறு தோறும் ஒவ்வொரு கோயிலுக்கும் சென்று தேவாரம் ஓதி வழிபாடு நடத்தினார். இன்றும் சைவம் திகழ்கிறது. நாகை நண்பர் திரு ஆ நாராயணசாமி அவர்கள் சேக்கிழார் மன்றம் அமைத்துள்ளார்.

12. க்ெகல் கோயில்

நாகை சைவத்துடன் இணைக்கத்தக்கது. சிக்கல் சிங்காரவேலர் திருக்கோயில். தொடக்கத்தில் இஃது அருவுருவத் திருவுருவமைந்த சிவன் கோயில், பின்னர் முருகன் இடம் பெற்றுச் சிங்காரவேலர் போயிலாயிற்று.

ஏழாம் நூற்றாண்டுத் திருஞானசம்பந்தர் சிக்கல் சிவனாரைப் பாடியுள்ளார். அப்பாடல்களில் முருகன் - சிங்காரவேலன் பற்றிய குறிப்பே இல்லை. அவர் பாடலில் வெண்ணெய்ப் பெருமானாகச் சிவ பெருமான் உள்ளார். அம்மை பெயர் வேலொண்கண்ணி யினாள். மற்றிரு தேவாரத்தார் பாடல்கள் இல்லை. வெண்ணெய் சிக்கியது

வசிட்ட முனிவர் இங்குக் காமதேனு சுரந்த மிகுபாலில் திரண்ட வெண்ணெயால் இலிங்கம் அமைத்து வழிபட்டு அதனை எடுத்துச் செல்ல முயன்றபோது எடுக்க இயலாமல் நிலத்துடன் சிக்கியதால் இவ்வூர்க்குச் சிக்கல்' எனறு பெயர் வந்ததாம். இவ்வெண்ணெய்ப் பெருமான் கோயிலை ஒட்டி முருகன் கோயில் கட்டுமலைக் கோயிலாகப் பெரிய அளவில் அமைந்தது. -

வள்ளி, தேவானையுடன் முருகன் மயில்மேல் அமர்ந்த தோற்றம் மிக அழகானது சிற்பக் கலையில் மிகப் பாங்குடையது. கந்த சட்டி விழா, சூரசம்காரம் மிகச்சிறப்புடைய விழா. கார்த்திகையில் வள்ளி தேவானை திருமண விழாவின் வெள்ளித் தேர்க் காட்சி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/281&oldid=585162" இலிருந்து மீள்விக்கப்பட்டது