பக்கம்:நாகப்பட்டினம்.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264 நாகபட்டினம்

கவர்ச்சியானது. உரிய ஊர்தி ஆட்டுக்கடா, மற்றும் மயில் முதலிய ஊர்திகள் பொன்னாலும் வெள்ளியாலும் ஆனவை. இக் கோயிலில் 13ஆம் நூற்றாண்டிலான சடாவர்மன் கல்வெட்டு ஒன்று உள்ளது. 14ஆம் நூற்றாண்டு அருணகிரியார் திருப்புகழ் பாடியுள்ளார்.

இக்கோயிலின் எதிரில் பெரிய திருமண மண்டபம் ஒன்றுள்ளது. திருக்குளமும் உள்ளது. சிக்கல் நாகை திருவாரூர்ச்சாலையில் கீழ்ப் புறம் நாகையிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது. சாலையி லிருந்து உள்ளே செல்லும் வாயிலில் புதிதாக மகர தோரண வாயில் அமைக்கப் பெற்றுள்ளது. -

ஈ. நாகையில் திருமாலியம் (வைணவம்)

"மாயோன் மேய காடுறை உலகம்" என்னும் தொல்காப்பியத் துடன் தமிழ்மண்ணில் அறிமுகமாகும் திருமால், முல்லை நிலத் தெய்வமானார். தமிழ் மண்ணில் திருமாலியத்தின் மூலம் அறியக் கூடவில்லை. வடபுலத்திலிருந்து வந்த சமயம் என்பர் ஆய்வாளர். இஃது ஐயத்திற்குரியது.

ஆழ்ந்தோர் -

தமிழகத்தில் திருமாலியத்தை ஊன்றிப் பயிரிட்டோர் ஆழ்வார் கள். எட்டாம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்தவரான நம்மாழ்வார் முதலாகத் திருப்பாணாழ்வார்வரை ஆழ்வார் பதின்மர். "பதின்மர் செந்தமிழைப் படிக்கிலாய்" என்று திருவேங்கடக் கலம்பகம் பதின்மராகப் பாடும். மேலும் ஆண்டாளையும் மதுர கவியையும் கூட்டிப் பன்னிருவர் என்பர். தொடர்ந்து இராமநுசரும் நீர்ஊற்றி எரு இட்டனர். தமிழ் மண்ணில் திருமாலிய உயர்வைத் திருமாலாம் இறைவனே,

"என் அடியவர்கள் என் பாதநீர் பருகி என் மதம் நிகழும் தமிழ் நாட்டில் தோன்றுவர்" என்றுகூறியதாகப் பிருகத் பிரும சங்கிதையில் உள்ளது என்பர். இது கொண்டும் ஆழ்வார் பெருமக்களால் தமிழகத்தில் திருமாலியம் தழைத்ததை அறியலாம்.

"ஆழ்வார் என்பார் எம்பெருமானுடைய (திருமாலுடைய) மங்கல குணங்களில் ஆழங்காற் படுமவர்கள்"

என்றனர் தொன்மைத் திருமாலியச் சான்றோர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/282&oldid=585163" இலிருந்து மீள்விக்கப்பட்டது