பக்கம்:நாகப்பட்டினம்.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமய நாகை - * 267

பாம்புலகம் செல்லப் புலவழி அறியாமல் கவன்றபோது அழகர் அருளால் வழிகண்டான் என்கிறது புராணம். இச்சாலிசுகனுக்கும், நாக அரசனுக்கும் காட்சி தந்ததையும் புராணம் கூறுகிறது. கோபுரம் கண்டனர் -

ஏறத்தாழ ஏழாம் நூற்றாண்டளவில் இக்கோயில் எழுப்பப் பெற்றிருக்கலாம். நாயக்க மன்னர்களது திருப்பணியும் நேர்ந் துள்ளது. கி.பி. 1659 இல் ஆட்சி அலுவலராக இருந்த சகுல் நாயக்கர் என்பார் (நாக மாமுடிநாயக்கர் குமாரர்) தாம் 90 શ્રી, உயர அரச கோபுரத்தை எழுப்பி உள்ளே மண்டபங்களையும் கட்டினார் என்பதற்கு அடையாளமாக இவரது உருவமும் இவர் மனைவியார் இலட்சுமி அம்மையாரது உருவமும் கைகூப்பி நிற்கும் பாங்கிலும் கிடந்து வணங்கும் பாங்கிலும் உள்ளன. 1787-இல் மராத்திய அலுவலராயிருந்த குண்டோபண்டிதர் என்பவர் அர்த்த மாமண்டபம் கட்டியுள்ளார். இதனைக் குறிக்கும் கல்வெட்டு உள்ளது. நகரத்துப் பெருமக்கள் திருப்பணிகள் செய்துள்ளமைக்கும் கல்வெட்டு காணப் படுகிறது. காதலி ஏக்கம்

இத்திருக்கோயில் இறைவன் திருமங்கையாழ்வாரால் பாடப் பெற்றுள்ளார் அன்றோ? பத்து இனிய பாவிசைகளில் முதல் ஒன்பது பாடல்களின் ஈற்றிலும், -

"அச்சோ ஒருவர் அழகியவர்" என்றும் பத்தாவது பாடலில் "நாகை அழகியார்" என்றும் அழகுத் தமிழில் பாடியுள்ளார். இப்பாடல்கள் அகத்துறைப்பாடல்கள்; அழகியார்பால் காதல் கொண்ட தலைவி தன் தோழியிடம் கூறும் பாங்கில் அமைந்தவை.

"தமர்தம் இல்லம் புகுந்து நின்றார் நாகரிகர் பெரிதும் இளையர்" (20) என்று அவர் அழகில் நாகரிகம் கண்டு, இளமைப் பொலிவில் இளகித் துவண்டு கொஞ்சிப் பேசும் பாடல்கள் இவை.

"பொன் இவர் சோதி மரகதத்தான் பொங்கிளஞ் சோதி" - என்று மரகதமாக - பல்வகைப் பேரொளியாகக் காண்கிறாள். நாகைக் காரோனர் ஒரு கோமேதகம் என்றால் நாகை அழகியர் ஒரு மரகதமாக வண்ணனையில் நிற்கிறார். பத்தாவது பாடல் கடைகாப்புப் பாடல். திருமங்கையாழ்வார் தம்மைக் "கலிகண்டன்’ என்று பாடிக்கொள்வார்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/285&oldid=585166" இலிருந்து மீள்விக்கப்பட்டது