பக்கம்:நாகப்பட்டினம்.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268 நாகபட்டினம்

"சிர்க்கலி கண்டன் குன்றா இசையால் சொன்ன செஞ்சொல் மாலை" (22)

என்று நிறைவேற்றியுள்ளார். -

இக்கோயில் திருவிழா பெருவிழாவாக, பங்குனியில் பத்து நாள்கள் நிகழும். காலையில் தங்கப் பல்லக்கிலும், மாலையில் அழகிய ஊர்திகளிலும் வீதிஉலா நிகழும். தேர்த்திருவிழா உண்டு. சித்திரை தொடங்கி ஒவ்வொரு திங்களும் மரபான விழாக்கள் நிகழும். வைகாசியில் நம்மாழ்வாருக்கு 5 நாள் விழா குறிக்கத் தக்கது. ஆனியில் அம்மனுக்குத் திருவிழா நிகழும். இக்கோயிலில் படிமம் கொண்ட மணவாள மாமுனிகளுக்கு ஐப்பசியில் பத்து நாள்கள் விழா நிகழ்வதும் ஒரு தனிச்சிறப்பு.

இவ்வழகியாரை இசை மும்மணிகளில் ஒருவராகிய முத்துசாமி தீட்சதர் சில இசைப்பாடல்களால் போற்றியுள்ளார். திருமாலிய நூல்களிலும் நாகைப் பாடல்கள் உள்ளன.

நாகைக்கோர் உயர் கோயிலாக இக்கோயில் திகழ்கிறது. நாகையிலும் வெண்ணெயர் -

இதன் தென்மேற்கில் தனித் திருமுன் வீதி கொண்டு அருள்திரு வெண்ணெய்க் கண்ணன் கோயில் ஓரளவான அமைப்புடன் விளங்குகிறது. தனக்கெனத்தனித் திருவிழாவையும் காண்பது இக் கோயில், நாகூரில் ஒரு அரங்கநாதர் கோயில் இருந்தது. அதனைப் போர்த்துகீசியர் இடித்து விட்டனர். இதனை வரலாற்றாசிரியர் திரு. கே.கே. பிள்ளையவர்கள் சான்றுகள் காட்டித் தம் தமிழக வரலாற்றில் காட்டினார்.

நாகையில் திருமாலியம் ஒரளவில் தன் தனித்தன்மையால் இன்றும் திகழ்கிறது. சமயப் பிடிப்பும் தமிழ்த் திருவாய்மொழிப் பற்றும் கொண்ட திருமாலியத்தராய் இச்சமயத்தார் வாழ்கின்றனர்.

வள்ளலார் மன்றம் - தமிழ்ச் சமயக் கோயில்கள் பலவாய் நாகையில் அமைந்திருக்க ஒரு சமயச் சார்புமின்றித் தமக்கெனத் தனிவழி கொண்ட வள்ளலார் அருள்திரு இராமலிங்க அடிகளார் கோயில் ஒன்றும் புண்டரீகுளம் மேல்கரையில் அமைந்துள்ளது. தைப்பூச நாள் கொண்டாடப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/286&oldid=585167" இலிருந்து மீள்விக்கப்பட்டது