பக்கம்:நாகப்பட்டினம்.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270

உ. நாகையில் இசுலாமியம்

இசுலாமியமும் கிறித்துவமும்

இசுலாமியம் ஓர் உலகளாவிய சமயம். கிறித்துவத்திற்கு அடுத்த நிலையில் உலக எல்லைப் பரப்புடையது. அதுபோன்றே பேரெண் னிக்கை மக்களால் பின்பற்றப்படுவது. இசுலாமியம், கிறித்து வத்தின் ஒரு மாற்று வடிப்பாகும். அதனால் இவை ஓர் அச்சு வடிப்பு களாகவே உள்ளன. கிறித்துவத்தில் பல இறைத் தோற்றாளர்க்குப் பின்னர் இறுதித் தோன்றலாக ஏசுகிறித்து தோன்றினார். அது போன்றே ஒரு நூறாயிரத்து இருபதினாயிரம் இறைத்தோற்றாளராம் நபிகளுக்குப் பின்னர் முகம்மது நபியவர்கள் தோன்றினார்கள். இரு சமய முன் இறைத் தோற்றாளர்கள் பெயர்கள் பலவும் ஒத்திருப் பதையும் அறியலாம். அங்கு மோசே, இங்கு மூசு நபியாவார். ஏசுவையும் ஈசாநபி என்றனர். இதுபோன்றே பிறவும். ஒரு சிறு பட்டியலாக இரண்டையும் ஒன்றித்துக் காட்டலாம். -

கிறித்துவம் இசுலாமியம் ஒரே கடவுள் யெகோவா ஒரே கடவுள் அல்லா முற்றறிவோர் (தீர்க்கதரிசிகள்) நபிகள் பலருள்ளனர்.

பலருள்ளனர் நம்பிக்கைத் தோன்றல் ஏசு. இறுதி நபி முகம்மது நபி உயிர்த்தெழுதல் நம்பிக்கை உயிர்த்தெழுதல் நம்பிக்கை

இவ்வாறு மற்றும்பல ஒன்றிப்பைக் கொண்டவை இரண்டும். இசுலாத்தின் கோட்பாடுகள்

இசுலாம் என்பதற்குக்'கடவுளின் பெயரால் அமைதி வழி என்று பொருள். இசுலாம் என்பதே சமயப் பெயர். முகம்மதியம என்பது முகம்மது நபியவர்களைப் பின்பற்றுவோர் என்னும் பொருள் கொண்டது என்று கண்டோம். இன்றைக்கு 1480 ஆண்டுகளுக்கு முன் அரபு நாட்டில் முகம்மது நபியவர்கள் தோன்றினார்கள். இறை யருளாலும் தம் பட்டறிவாலும் இசுலாமியத்தைத் தோற்றுவித்தார்கள். முஃச்லீம் என்பது அரபுச் சொல். .

இறைவன் அருள்மொழியாக முகம்மது நபியவர்களின் வழியாகவந்த அருள்நூலே குர்-ஆன் எனப்படுவது என்பர். இஃதே இசுலாத்தின் ஒரே மறைநூல். ---

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/288&oldid=585169" இலிருந்து மீள்விக்கப்பட்டது