பக்கம்:நாகப்பட்டினம்.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமய நாகை - - 271

இசுலாத்தின் கோட்பாடு ஈமான் எனப்படும். ஏழு நம்பிக்கை கள் அவை 1. அல்லா ஒருவரே கடவுள் 2. அவர் அனுப்பிய மலக்கு என்னும் அருளாளர்கள் நம்பிக்கைக்குரியவர்கள்: 3. இறைதூதர் முகமது நபியவர்கள், 4. நபிகள் அறவுரைகள் சிறந்தவை:5, இறுதித் ஆர்ப்பு நாள் உண்டு; 6. நன்மை தீமை எல்லாம் இறைவன் பாலவை; 7. இறைவன் இறந்தவரை உயிர்ப்பிப்பான். இவை ஏழும் அகக் கோட்பாடுகள். +

புறக்கடமைகள் ஐந்து. அவை: 1. அல்லா ஒருவனையே வனங்குதல்; 2. நாளும் ஐந்து வேளை தொழுகை, 3. ஏழைப் பங்கீடு; 4. இரம்சான் திங்களில் நோன்பு 5. தூய மக்கா பயணம்.

இவ்வேழும் ஐந்துமாகிய இரண்டு பகுதிகளே இசுலாத்தின் விதிப்புகள், இசுலாத்தில் உருவ வழிபாடே இல்லை; எவ்வகை உருவத்தையும் எதிலும் கொள்வதில்லை. தொழுகையில் அனைவரும் உண்மையாகச் சமமே; கீழைநாட்டார் மக்கா மேற்கில் இருப்பதால் மேற்கு நோக்கித் தொழுவர். மத்தி எனப்படும் கோயிலில் சென்றுதான் தொழ வேண்டும் என்பதில்லை. எங்கும் உண்ர்வுடன் தொழலாம்.

வழிபாட்டுத் திருவிடக் குறியீடு

ஒவ்வொரு சமயத்தாரும் தாம் தாம் வழிபடும் அல்லது.தொழும் திருவிடத்தை ஒவ்வொரு குறியீட்டுச் சொல்லால் குறிப்பர். சைவத் தார் கோயில் என்பர். கோயில் என்றாலே தில்லைக் கோயிலைக் குறிக்கும். பூங்கோயில் என்றால் திருவாரூர்க் கோயிலைக் குறிக்கும். திருமாலியத்தார் திருப்பதி என்பர்; தமிழில் விண்ண கரம் என்பர். சமணத்தார் வடமொழியில் சிலாதலம் என்பர். புத்தர் பாளி மொழியில் விகாரை' என்பர். கிறித்துவர் ஆங்கிலத்தில் 'சர்ச்சு என்றும் மாதாகோயில், திருச்சபை என்றும் குறிப்பர். இசுலாமியர் மதுதி என்னும் அரபுச் சொல்லால் குறிப்பர். மதுதி' என்றால் தொழும் தூய இடம் என்று பொருள். துறவிகள் அடக்கமான புதைவிடத்தைத் தர்கா என்பர். - பள்ளி வந்த வழி

ஒரு தமிழ் வழக்கு உண்டு. அரசர் அடக்கம் செய்யப்பெற்ற இடம் 'பள்ளிப்படை' எனப்படுவது தமிழ் வழக்கு. தொன்மையான பள்ளிப்படைகளே பின்னர் கோயில்களாக மாற்றம் பெற்றன !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/289&oldid=585170" இலிருந்து மீள்விக்கப்பட்டது