பக்கம்:நாகப்பட்டினம்.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2?荔 நாகபட்டினம்

தெற்கிலும் மற்றொன்று மேற்குப் பக்கத்திலுமாக உள்ளன. மேற்குப் பகுதிக் கல்வெட்டில்

"மனோரா 11 நிலம் கட்டி முடிச்சுது. யுவ வருஷம் தை மாதம் 10ஆம் தேதி கும்பம் வைத்தது" என்று மனோராமுகட்டில் கும்பம் வைத்ததும் பொறிக்கப்பட்டுள்ளது. ஒருமைப்பாட்டுக் கல்வெட்டு

இம்மனோராவில் இசுலாமியச் சார்பாகப் பாரசீக மொழி, மராத்திய மன்னர் சார்பாக மராத்திய மொழி: தமிழ்மண் சார்பாகத் தமிழ் மொழி என மும்மொழிகளில் அமைந்தமை ஒருமைப்பாட் டெண்ணத்தைத் காட்டுவதாகும்.

நாகூர் மனோரா

இதனைக் கட்ட மன்னரால் அமைக்கப் பெற்ற 1. சர்கேப் மானோசி செக்தாமித்தியர் 2. நாகூர் பந்தா சார்பாக அருனோசி போன்சுலே 3. மத்தியத்தர் (அமீனா) சேக் அப்துல் மல்லிக் (மராத்திய அரசு அலுவலர்) ஆகிய மூவரும் பொறுப்பேற்று நிறைவேற்றினர். மராத்திய மன்னரின் மனம் விரிந்த நல்கைகள்

மராத்திய பிரதாப மன்னன் இத்துடன் தர்காவிற்கு நல்கையாக "இளம்கடம்பனூர் என்னும் சிற்றுார் வருவாயை வழங்கினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/296&oldid=585177" இலிருந்து மீள்விக்கப்பட்டது