பக்கம்:நாகப்பட்டினம்.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298 நாகபட்டினம்

வெளிநாட்டு வணிகத்தில் பண்டமாற்றுக் குறைந்து நாணயப் புழக்கம் உண்டாயிற்று. வெளிநாட்டுப் புழக்க நாணயங்கள் பொன் னால் அமைந்தன. சிரீவிசய மன்னர் வழி வணிகத்திலும், அறத் திலும் சீனக்கனகம் என்னும் சீனநாட்டுப் பொன் நாணயம் இருந் ததை வரலாற்றாசிரியர் திரு.கே.சி. கிருச்னன் குறித்துள்ளார். (2)

கி.பி. 1777 இல் சோழ நாட்டு வணிகர் 72 பேர் ஒரு குழுவாக நாகைத் துறைமுகம் வழியே விலைமதிக்க முடியாத பொருள் களுடன் கீழைநாடுகளுக்கும் சீனாவிற்கும் சென்று வணிகம் புரிந்தனர். இது குலோத்துங்கன் சுங்கம் தவிர்த்ததால் நேர்ந்த நன்மை எனலாம். அலை அலையாக யானை குதிரைகள் - 11ஆம் நூற்றாண்டினரான சேக்கிழார் தம் பெரிய புராணத்தில், "கரிபரித்தொகை சொரிவதாம் கலத்தால்" என்று நாகைக் கடற்றுறையில் யானைகளும் குதிரைகளும் இறக்குமதியானதைப் பாடியுள்ளார். பூம்புகார் துறைமுகத்தில் யானைகளும், குதிரைகளும் பிற மதிப்பார்ந்த பொருள்களும் இறக்குமதியானமை இங்குத் தொடரப்படாமல் என்ன ஆகும்?

மேலைக் கடற்கரையில் ஏற்றப்பட்ட யானைகள், மிளகு, ஏலம், தேங்காய் முதலியனவும் அரபு நாட்டுக் குதிரைகளும் இங்கு இறக்குமதியாயின. - -

சேக்கிழார் நாகையைப் பற்றிப் பாடிய இரண்டு பாடல்கள் கனக்கில் எடுத்துக் கொள்ள வேண்டியவை. அவர் சோழ நாட்டு அமைச்சராகவும் இருந்தவர். எனவே, நாகையைக் கண்டே பாடினார் எனலாம். -

"பெருமை யிற்செறி பேரொலி பிறங்கலின் நிறைந்து திரும கட்குவாழ் சேர்விடம் ஆதலில் யாவும் தருத லின்கடல் தன்னினும் பெரிதெனத் திரைபோல் கரிய ரித்தொகை மணிதுகில் சொரிவதாம் கலத்தால்" (3) என்று இறக்குமதியாலும், ஏற்றுமதியாலும், வணிகத்தாலும் நாகை நகர் பேரொலி பெற்றிருந்தது என்றார். வணிகத்தில் செல்வவளம் கொழித்ததைத் திருமகள் வாழ்வதற்குச் சேர்ந்த இடம் என்றார். கடலாலும் நிலத்தாலும் அனைத்துப் பொருள்களும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/316&oldid=585197" இலிருந்து மீள்விக்கப்பட்டது