பக்கம்:நாகப்பட்டினம்.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வணிகம், தொழில் நாகை 325

அமைந்தது. நாகைப் புகை வண்டி நிலையத்தை ஒட்டித் தெற்கில் இஃது அமைக்கப் பெற்றது. சுற்றும் உயரமான பாதுகாப்பு மதிற்கூவர் களுடன் இது அமைந்தது. இங்குப் புகைவண்யத் துறைக்குரிய இரும்புத் தொடர்பான பொருள்கள் உருவாக்கப் பெற்றன.

உருவானவற்றை எடுக்கவும் இரும்புப் பாளங்களை உள்ளே கொண்டுசெல்லவும் தொழிற்சாலைக்குள்ளே புகைவண்டித்தொடர் செல்ல இருப்புப்பாதை அமையும் அளவிற்குச் செயற்பாடுகள் பெருகியிருந்தன. இது நாகைக்கு ஒரு பெரும் வளந்தருவதாகவும் சிறப்பாகவும் அமைந்திருந்தது.

பலர் பணி பெற்றனர். கிழமை (வாரம்) தோறும் கூலி கொடுக் கப்பட்டது. திங்கள் ஊதியத்திற்கும் பலர் பணியாற்றினர். இதனால் கிழமை தோறும் நகரில் பணப்புழக்கம் இருந்தது. இங்கு நேர்ந்த இடையூற்றால் இது திருச்சி, பொன்மலைக்கு மாற்றப்பட்டது என்பர்.

அவ்விடம் முன்னமைப்பின்படியே இப்போதும் உள்ளது.

11. எஃகு உருட்டுத் தொழிற்சாலை

புகைவண்டித் துறைத் தொழிற்சாலை மாறியதும், அவ்விடத்தில் டாடா நிறுவனத்தார் ஒர் எஃகு உருட்டாலையை ஏற்படுத்தினர்.

இங்கு இரும்பு நீள் பாளங்கள் கொண்டு வரப்பெற்று பெரும் உலையில் இளகச் செய்து பல்வகைக் கம்பிகளை உருவாக்கு கின்றனர். இவை பல வகையில் வீட்டுக் கட்டுமானங்களுக்கும் தொழிற்சாலைப் பயன்களுக்கும் செல்கின்றன.

இவற்றுடன் ஆணிகள் செய்யப்படுகின்றன. இந்த ஆலையில் நூற்றுக் கணக்கில் தொழிலாளர் பணியாற்றுகின்றனர். இஃதொரு குறிப்பிடத்தக்க தொழிற்சாலையாக உள்ளது. -

இதனை ஒட்டித் தனியார் வார்ப்புத் தொழிற்சாலை சாலமோன் பவுண்டரி என்னும் பெயரில் இயங்கி வருகின்றது. 12. தொழிற் பேட்டை

நகரின் வடக்கில் நாகை நாகூர் இடையில் அரசால் தொழிற் பேட்டை வளாகம் ஒன்றமைக்கப்பட்டு, தொழிற் சாலைக்குரிய கட்டடங்கள் அமைந்தன. இவற்றில் தனியாரும் சில நிறுவனத்தாரும் அரசினரும் ஈய எழுதுகோல் (Pencil), சேமியா முதலிய தொழில் களை ஆற்றி வருகின்றனர். -

இஃது இன்னும் பெருக வாய்ப்புள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/343&oldid=585224" இலிருந்து மீள்விக்கப்பட்டது