பக்கம்:நாகப்பட்டினம்.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. கற்றவர் பயிலும் நாகை

அ. முற்காலக் கற்றவர்

கற்றவர் எந்நாட்டிலும், எவ்வூரிலும் இருப்பர். சிற்றுார்களிலும் கற்றவர் ஒருவராவது இருப்பார். முற்காலத்தில் நூல் என்பதற்குக் "கணக்கு என்றொரு சொல் உண்டு. நூலை - கணக்கை ஆராய்ந்தவர் கணக்காயர் எனப்பெற்றார்.

"கணக்காயர் இல்லாத ஊரும் -- * * * * *- நன்மை பயத்தல் இல(1)” என்று - நூல் பாடியது. இவ் வாறிருக்க நாகைக்கு மட்டும் கற்றவர் உரியவரா? இல்லைதான். ஆனால் இங்குக் "கற்றவர் நாகை" என்றில்லை; "கற்றவர் பயிலும் நாகை" என்றுள்ளது. கற்றவர் மேலும் மேலும் பயின்ற சிறப்பு நாகைக்கு ஒரு சிறப்பு.

தாம் பாடிய திருநகர்களுக்குப் பல சிறப்புகளைப் பாடிய திருநாவுக்கரசர் நாகைக்கு மட்டும் "கற்றவர் பயிலும்" என்று அடை மொழி கொடுத்தார்.

"கற்றவர் பயிலும் நாகைக் காரோணம்" என்று முன்னும் (2) "கற்றவர் பயில் கடல் நாகை" என்று அடுத்தும் (3) இருமுறை புகழ்ந்தார். திருஞானசம்பந்தரும் "ஞானத்துறை வல்லார் தொழுதேத்த" (4) என்று ஞானமாம் மெய்யறிவு பெற்றாரும் அவ்வழி கற்றாரும் இருந்தமையைக் குறித்தார். சுந்தரர் நகரத்தாரைக் குறிக்கவில்லை. அவர் நகரத்துப் பொருள்களிலேயே நோட்டம் வைத்து அவற்றை வேண்டியே பாடியுள்ளார். புத்தம் கற்றார்

மூவர் காலத்திற்கு முன்னரும் பின்னரும் புத்தத் துறவியார் நாகையில் வாழ்ந்தனர் அன்றோ. அன்னார் துறவுப் பணியாக நூலாய்வும் நூலாக்கமுந்தான் நாகையில் நிகழ்ந்தன. அதனால்,

"நற்றவர்க்கு இடமாவது நாகையே" என்றார். பிள்ளை யவர்களும் "கற்றவர் புகழும் நாகை" என்றார். மேலும் பிள்ளயவர்களே,

"கழக இடம் கரையிலவாம் நாகநகர்" (5) என்று கற்றவர் கூடிப் பயின்று ஆராயும் கழகங்கள் நாகையில் எண்ணிக்கையற்று இருந்தன என்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/346&oldid=585227" இலிருந்து மீள்விக்கப்பட்டது