பக்கம்:நாகப்பட்டினம்.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்றவர் பயிலும் நாகை 3.35

வருணகுலாதித்தன் மக்களைப் பசியின்றிக் காத்ததால் காத்தான் என்னும் புகழ்ப் பெயரில் விளங்கினான்.

"கருணைமுகில் ஆனகொடைக் காத்தான் தென்னாகை வருணகுலாதித்தன்" (11) என்று போற்றப்பெற்றான். இவன் வருணகுலத்துக் கோனேரிராசன் மகன் அச்சுதராயன் என்னும் இயற்பெயருடன் வருணகுலாதித்த அச்சுதராயன் என்றும் திருமலைராய வருணகுலாதித்தன் என்றும் வழங்கப்பெற்றவன்.

நாகையர் கோன் என்று போற்றப்பெற்றான். இவன் காலம் கி.பி. 1725 - 1750, என்று கணிக்க முடிகிறது. இப்புகழ் பெற்றவனாம் கற்றவனையும் பெற்றது நாகை. அழகிய முத்து

அருணகிரியார் முருகன் மேல் பாடியது திருப்புகழ் நாகை அருணகிரியார் எனத்தக்க நாகை அழகுமுத்துப் புலவர் நாகைக் குமரன் மேல் பாடியது திறப்புகழ்'. அது "கிரி பாடியது. இது "முத்து" பாடியது. அது திருவான புகழ். இது திறமான புகழ். தொழுநோயரான புலவர் அழகுமுத்து அவர்கள் நாகைக் குமரன் கோயில் மெய்க்காவலராகத்திருப்பணி ஆற்றியவர். நாகை நீலா வடக்கு வீதியில் வாழ்ந்த திரு அம்பலவாண செட்டியாருக்கும் திருமதி சிவகாமசுந்தரிக்கும் அரும் மகனாகப் பிறந்தவ்ர். இவர் திரு ஆனந்தரங்கம்பிள்ளையை "நாகை வரு ரங்கன் வாழி" என்று பாடியிருத்தலால் அவர் காலமாகிய கி.பி. 18ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்தவர் ஆகிறார்.

அழகு முத்துப்புலவர் பாடியவை திறப்புகழ்', 'மெய்கண்ட வேலாயுத சதகம்', 'மெய்கண்ட வேலாயுதக் குறவஞ்சி' என்னும் மூன்றுமாகும்.

உடல் தொழு என்றாலும் செய்யுள் முத்து; அழகிய முத்து: சந்தத்தோடு"இசைக்கும் முத்து". இவர்தம்திருவுருவம் அக்கோயிலில் உள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/353&oldid=585234" இலிருந்து மீள்விக்கப்பட்டது