பக்கம்:நாகப்பட்டினம்.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்றவர் பயிலும் நாகை 3连9

சென்னையில் கம்பன் கழகம் அமைத்துக் கம்பன்,கன்னித் தமிழ் பரப்புகின்றவர். கம்பராமாயணப் பதிப்பை அழகியதாய்ப் பதிப்பித் துள்ளார். கருத்தழகும் சுவையழகும்பட கம்ப இராமாயணத்தையும் பிற இலக்கியங்களையும் திறம்படப்பொழியவும் எழுதவும் வல்லவர். இசுலாமியரான இவர் புலால் உண்ணாத பெருந்தகை. நேர்மையும், நெறியும், கண்டிப்பும் கொண்ட அறவர்.

இக்கற்றாரைப் பெற்ற நாகை மற்றாருக்கும் பயன்படும் வகையில் அவரைச் சென்னைக்கு வழங்கிற்று. புலமைப் பணியினர் -

நாகை நாட்டுயர்நிலைப்பள்ளியில் நெட்டாண்டுகள் பணி யாற்றிப் புகழுடம்பில் நிற்கும் புலமைத்திரு வை. சண்முகதேசிகர் சைவப் பெரும்புலவர். கணிரென்ற குரல் இசையாளர். பல மணிக் காலம் தேவாரத்தை நல்லிசையுடன் பாடும் செம்மல். சமயச்சொற் பொழிவில் இசையர். இலங்கைக்குச் சென்று சமயச் சொற் பொழிவுகள் ஆற்றியவர்.

ஆங்கில மருத்துவராய்த் தமிழ் பயின்ற பெருமகன் மருத்துவர் திரு ப.மு. சொக்கலிங்கனார். தருமைச் சைவத் திருமடத்துப் புலவர் தமிழ்த்திரு. த. முத்துத் தாண்டவராயர் மகனார். எளியவர்க்கு இரங்கும் பெருந்தகை. நாகைத் தமிழ்ச் சங்கப் புலவர் விரும்பிப் பயின்று 65 ஆவது அகவையில் புலவர் பட்டம் பெற்றவர். செம்பாகமான செய்யுள்கள் இயற்றியவர். வெண்பாக்கள் இயற்றும் திறனாளர். தருமையாதீனச் சிலேடை வெண்பா என்றொரு நூலைப் படைத்தவர். சைவ முத்திரை பெற்றவர். நிறைவுக் காலம் வரை தமிழ் நூல்களைப் படித்துச் சுவைத்தவர். குழந்தை உள்ளம்கொண்டவர்.

நாகை நகைக் கடையில் எளிய கணக்கராகப் பணியாற்றி யவராகச் சிக்கலில் வாழ்ந்த திரு. சிங்காரவேலர் நல்ல எழுத்தாளர். பொதுவுடைமை மூலவர் காரல்மார்க்சு எழுதிய முதலிமை (Capital) என்னும் நூலை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழி பெயர்த்தவர். அஃது அச்சில் வந்துள்ளது. அட்க்கமானவர். கற்றவர் என்று கொண்டு நாம் உவக்கலாம். -

நாகையில் தமிழறிஞராக வாழும் திருமாலியத் திரு இரா. ஆதி கேசவனார் ஒரு நிலக்கிழார். அதனினும் மேலாகத் தமிழ்ப் புலக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/367&oldid=585248" இலிருந்து மீள்விக்கப்பட்டது