பக்கம்:நாகப்பட்டினம்.pdf/372

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.54 - நாகபட்டினம்

ராயினர். தமிழ்ச்சங்கப் பொருளாளராகப் பெருவணிகர் திரு நா.வீ. காயாரோகணஞ் செட்டியாரும், பின்னர் அவர் இளவல் திரு. ஆ. நாராயணசாமி அவர்களும் உதவினர். நாகை மக்களின் சிறப்பான் துணையுடன் நிறைந்து மகிழ்தற்குரிய பணிகள் ஆற்றி, அது இருந்த இடம் இதுதான் என்று காட்டுவதற்கு விழுந்துள்ள வீரப்பசெட்டியார் சத்திரம் உள்ளது. தமிழ் மன்றங்கள்

வெளிழ்பாளையத்தில் தொல்காப்பியர் மன்றம் தோன்றிப் Çஉருவாக்கியது. அதனையும் தேட வேண்டியுள்ளது. ஆனாலும் அது வழங்கிய புலவர்கள் சிறந்து வாழ்கின்றனர்.

"தமிழ் இலக்கிய மன்றம்" ஒன்று மருந்து வணிகர் திரு. ஆ. இராமசாமி அவர்களால் தோன்றித் தமிழறிஞர் இரா. ஆதிகேசவன் அவர்களைத் தலைவராகவும் புலவர் பல்கதிர்ச் செல்வன் அவர்களைச் செயலாளராகவும் கொண்டு கூட்டங் களையும், விழாக் கூட்டங்களையும் நிகழ்த்தி வருகிறது.

'முத்தமிழ் மன்றம் ஒன்று புலமை மகளிர் கற்ற மகளிர் முயற்சியால் தோன்றிப் புலமைத்திருமதி மணிமேகலை அவர்களின் செயற்பணியில் திகழ்கிறது. நாகூரில் செந்தமிழ்ப் படிப்பகம் சில்லாண்டுகள் நிலவித் தமிழ் பரப்பியது.

எனவே கற்ற தனியார் புலமையாலும் செயற்பாட்டாலும் மட்டுமின்றி நாகைக் கற்றார் பயில் சங்கங்கள். மன்றங்கள் வாயிலாகவும் தமிழ் பரவியது என்று எண்ணி மகிழலாம். 18-ஆம் நூற்றாண்டு வரை தமிழ்நாட்டில் கற்றார் என்றால் தமிழ் கற்றவரையே குறிக்கும். பின்னர் கல்வித் துறைகள் பெருகின. தொழில் துறைகள் தோன்றின. இவற்றைக் கற்றுப் பட்டம் பெற்றோராக வழக்கறிஞர், பொறியாளர், மருத்துவர், அலுவலர், பேராசிரியர் எனக் கற்றோர் பலவகையினராயினர். அன்னார் அனைவரையும் மிகு எண்ணிக்கையில் நாகை பெற்றுச் சிறந்தது; சிறக்கின்றது.

ஊ. கல்வி பயிற்றும் நாகை

கற்றார். பயில் நாகை கற்றாரை உருவாக்கும் நாகையாகவும் சிறக்கிறது. சிறார்க்குத் துவக்கப்பள்ளிகள், வேண்டிய அளவில் நாகையில் உள்ளன. ஆங்கில வழி மழலையர் பள்ளிகள் உள்ளன. உயர் தொடக்கப் பள்ளிகளும் உயர்நிலைப்பள்ளி ஒன்றும், மேல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/372&oldid=585254" இலிருந்து மீள்விக்கப்பட்டது