பக்கம்:நாகப்பட்டினம்.pdf/380

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

352 நாகபட்டினம்

பெயர் பற்றி நாளைக் காலத்தையும் கருதிப் பார்த்து முடிவாகச் சொன்னால் "நாகபட்டினம்" என்பது குலையாமல் கலையாமல் கல்லெழுத்தாக வேண்டியதேயாகும். நாகர்பட்டினம் என்பதே இதன் நிறைவான பெயர் என்றாலும் இதனை மீண்டும் கொணர மக்கள் முயல்வது சிறப்பாகும்.

இ. ஆட்சி நாகை

இன்றைய ஆட்சி

இம்மண்ணின் மைந்தராம் சோழர் ஆட்சியில் முன் நாகை : விளங்கியது. பின்னர் அயல்புல மன்னர் ஆட்சியில் குலைந்தது: வெளிநாட்டவர் ஆட்சியில் அலைந்தது. ஆங்கிலர் ஆட்சியில் சில நல அமைப்புகளைப் பெற்றது. இன்று இந்தியக் குடியரசின் ஆட்சியில் தமிழ் நாடு மாநில அரசினால் ஆளப்படுகிறது. அரசியல் கட்சியாளர் ஆட்சியாக - அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியாக உள்ளது. முதல் அமைச்சராக மாண்புமிகு செயலலிதா அவர்கள் உள்ளார்கள். ஒரு மாவட்ட ஆட்சியாளரின் நேர்முக ஆளுகையில் உள்ளது. மக்கள் சார்பில் சட்டப் பேரவை உறுப்பினராகத் திரு கோடிமாரி அவர்கள் உள்ளார். மருத்துவர் பத்மா அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.

புதுமாவட்டம் விவரம்

இன்று நாகபட்டினம் ஒரு புது மாவட்டமாக அமைக்கப் பட்டள்ளது. 18.1.1991 இல் ஒரு தனிப் புது மாவட்டமாகத் தொடக்கம் பெற்றது. முன்னர் கண்டதுபோல் நாகபட்டினம் காயிதே மில்லத் மாவட்டம் என்னும் பெயர் சூட்டப்பெற்றது.

இம்மாவட்டம் நாகபட்டினம் கோட்டம், மன்னார்குடிக் கோட்டம், மயிலாடுதுறைக் கோட்டம் என மூன்று கோட்டங்களாக உள்ளது.

11 வட்டங்களாக (1) நாகபட்டினம் வட்டம், திருவாரூர் வட்டம், நன்னிலம் வட்டம், குடவாசல் வட்டம், (2) மயிலாடுதுற்ை வட்டம், தரங்கம் பாடி வட்டம், சீர்காழி வட்டம், (3) மன்னார்குடி வட்டம், நீடாமங்கலம் வட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம், வேதாரணியம் வட்டம் என்பன அடைப்புக்குள் உள்ள எண்ணின்படி முறையே மூன்று கோட்டங்களில் அடங்கி உள்ளன.

5 சிறகங்கள் (Birca) 1185 வருவாய்ச் சிற்றுார்களைக் கொண்டுள்ளன. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/380&oldid=585265" இலிருந்து மீள்விக்கப்பட்டது