பக்கம்:நாகப்பட்டினம்.pdf/397

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்று - நாளை - நாகை 379

நிலத்தடி வளம்

நாகைக்குக் கிடைத்திருக்கும் பெரிய பேறு. நிலத்தடி எண்ணெய் வளமும், எரி வளி வளமும் ஆகும். நிலத்தடியில் இருக்கும் எண்ணெய் பாறை எண்ணெய் (Petrol) எனப்பெறும். இது "நீர்மப் பொன்" (Liquid Gold) என்று பொன்னுக்கு நிகராகச் சொல்லப் பெறுவது. நிலத்தடியில் இதன் படிவத்தைக் கண்டு பிடித்து வெளிக்கொணர ஆயும்புேர்தே இயற்கை எரிவளி (Natural Gas)யும் கிடைப்பது அறியப்படும். நம்நாட்டில் இதற்காக "எண்ணெய் Qusboa, srif'suérfi sãgyptb" (Oil Natural gas Corporation) figsui'i பெற்றுப் பணியாற்றுகிறது. -

காவிரி கழிமுகப் பகுதியில் இவ்வளத்தைக் காணும் பணி 30 ஆண்டுகளுக்கு முன் துவக்கப் பெற்றுஎண்ணெய்ப்படிவு. இருப்பது காணப்பெற்றது. இதற்கு முதன்முதலில் பட்டுக்கோட்டையில் நிலத்தில் துளையிடும் துரப்பனப்பணி 1963 செப்டம்பரில் துவங்கி எண்ணெய் இருப்பு காணப்பட்டது. தொடர்ந்து 1964-65 இல் நன்னிலம் வட்டம் திட்டைச்சேரியில் முதல் எண்ணெய்க் கிணறு தோண்டப்பட்டு எண்ணெய் இருப்பது காணப்பட்டது. ஆனால் இது வணிக முறையில் ஊதியம் தருவதாக இல்லை. இருப்பினும் பணி தொடர்ந்தது. -

இப்போது நரிமணத்தில் தோண்டிய கிணற்றில் எடுக்கப் பெறுவது வணிகத்திற்கு உரியதாக அறியப்பட்டுள்ளது. கிணறுகள் பகுதியில் எரிவளியும் காணப்பட்டுள்ளது. நாகைப் பகுதியில் ஒன்பது இடங்களில் எண்ணெய்க் கிணறுகள் பணி தொடர்ந்து நடக்கின்றது. - -

நாகைக்கு அண்மையில் உள்ள வேங்கடங்காலில் எண்ணெய்த் தூய்மி (Refinery) நிலையம் அமைகின்றது. எரிவளி எடுப்பும் சேமிப்பும் இப்பகுதியில் அமைகின்றன. *

இந்த எண்ணெய் வளத்தாலும் எரி வளி வளத்தாலும் எதிர்கால நாகை மிக வளம் பெற உள்ளது. எண்ணெய்த் தூய்மி அமைந்து பெருந் தொழில்வளத்தை உண்டாக்கும். எண்ணெய் வணிகம் நம்நாட்டிற்கு இறக்குமதியிலேயே கையேந்தி நின்ற நிலையை மாற்றி வழங்கும் கையாக உயர்த்தும் நிலையை அடைய வைக்க உள்ளது. இதில் நாகை பங்கு பெற்று வளம் பெறும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/397&oldid=585287" இலிருந்து மீள்விக்கப்பட்டது