பக்கம்:நாகப்பட்டினம்.pdf/396

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37.8 நாகபட்டினம்

இங்கு நெற்பயிர்தான் கணக்கில் முதன்மையாகக் கொள்ளப் படுவது. நகரில் அதன் மேற்கு எல்லையில் சிறிதளவான நன்செய் வயல்களே உள்ளன. சுற்றுப்புற ஊர்களின் அமைந்த வயல்களே இதன் வளத்தைக் காட்டுபவை. வேளாண்மை செய்வோர் பெருவேளாண்மையர், சிறு வேளாண்மையர், குறு வேளாண்மையர் என உள்ளனர். இப்பயிர்த்தொழிலுக்குரிய அறிவு மேலும் வளர்க்கப்பெற வேண்டும். பண்னைப் பல்கலைக்கழகம்

இவர்கள் அனைவரும் வழக்கமான வேளாண் முறைகளைப் புதிய வேளாண் அறிவியல் உதவியுடன் ஆற்றுகின்றனர்.

இத்தொழிலின் வருங்காலம் சிறக்க வேண்டுமாயின் இம் மாவட்டப் பகுதியில் கள ஆய்வை மேற்கொண்ட மூன்று வெளிநாட் டறிஞர்கள் வழங்கியுள்ள ஒரு கருத்தைச் செயற்படுத்த வேண்டும்.

@sumsir Geoso (Ivan Illish), strust Lissoso (Herman Daly) ஆல்வின் டாஃப்ளர் (Alwin Tofile) என்னும் மூவரும் ஒருமுகமாக,

"இப்பகுதி வேளாண்மையருக்கு அவர்கள் பயிர்த் தொழிலில் புகுமுன் அவர்கள் இழப்பைக் குறைத்துக் கொள்ளவும் அதனை ஈடுகட்டவும் அறிவுகொளுத்தப்பெறஒரு பயிர்ப் பண்ணைப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பெற வேண்டும்" என்றனர். இஃது இங்குள்ள வேளாண்மையரின் நிலப்பகுதி நிலையை உணர்ந்து சொல்லப்பெற்றது. எனவே, இவ்வாறு ஒரு பல்கலைக் கழகம் அமைதல் வருங்கால வேளாண்மையை உயர்த்தி வளமாக்கும். - -

இப்புதுமாவட்டத்தில் 4,51,433 எக்டேர் பயன்படுத்தக்கூடிய நிலப்பகுதி உள்ளது. இதில் 3,01,074 எக்டேர் விள்ைநிலம், காடு 11,023 எக்டேர். பயன்படாமல் 70,366 எக்டேர் நிலம் கிடக்கிறது.

இதனை மண்ணாய்வு செய்து நெற்பயிருக்கோ பொருத்தமான வேறு பயிருக்கோ பயன்படுத்தலாம். இப்பகுதி சணல் பயிரிடுவதற்கு ஏற்றது. வேதாரண்யம் பகுதிகளில் அண்மைக்காலமாகச் சணல் பயிரிடப்படுகிறது. இங்கும் செய்யலாம். மக்கள் கவனங்கொள்ள வேண்டும். இது பணப்பயிர். இங்கு மேலும் துணைப்பயிர்களைச் செய்து பயிர்த் தொழிலால் எதிர்கால நாகையை மேலும் வளப் படுத்தலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/396&oldid=585286" இலிருந்து மீள்விக்கப்பட்டது