பக்கம்:நாகப்பட்டினம்.pdf/395

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்று-நாளை - நாகை : 377

அரசு சார்பில் சிறப்பங்காடி வாணிபமும் நிகழ்கிறது. பொதுவாக ஓரளவான வாணிபம் நாகையில் நடைபெறுகிறது என்று சொல்லலாம். - - - நாளைய வணிகம் -

தொழில் வளத்துடன் கூடிய வணிகந்தான் பெரும் பயனுடையதாகும். நாகையின் எதிர்கால வணிக வளம் நாகையில் துவங்கியுள்ள தொழிலால் ஒளிபெற உள்ளது. பிற வணிகம், வாணிபம் இப்போதுள்ள அளவைவிட மேலும் சிறப்பாகப் பெரும் அளவில் தொழில் துணையால்தான் வளம்பெற உள்ளன.

அத்தொழில் யாது அதுதான் நிலத்தடி எண்ணெய் வளத் தையும், இயற்கை எரிவாயு (gas) வளத்தையும் வெளிக் கொணரும் தொழில் ஆகும். இத்துடன் எண்ணெயில் வேண்டாதவற்றைப் பிரித்துத் தூய்மையாக்கிப் பயன்படக் கூடிய வகையில் செய்யும் தொழிலும் இணைவதாகும். - - இன்றைய நாளைய தொழில் -

பொதுவாகத் தொழில் என்னும் போது நிறைதமிழ்ச் செம்மல் மறைமலையடிகளார் எழுதிய கருத்தொன்றை இங்குக் காணலாம்.

"தொழிலை அத்ற்கேற்ற இடங்களில் இரண்டாந்தரமாகவும், உழவுத் தொழிலை அதற்கேற்ற எல்லா இடங்களிலும் வைத்து முற்றாகவும் நடத்தி வருவார்களாயின் நம் நாட்டவர்கள் அளவுபடாத செல்வம் மலியப்பெற்று இனிது வாழ்வார்கள்" (5) என்றார். தொழில்களில் மக்களால் ஒதுக்க முடியாத இன்றியமையாமை கொண்டது உழவு தொழில். * - .

"சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்; அதனால் உழந்தும் உழவே தலை” (6) என்ற திருவள்ளுவர் மொழி வாய்மொழியன்றோ மக்களுக்கு முதன்மையானது உணவு என்பது உறுதியான உண்மை. அதனைத் தொடர்ந்து உடை, உறையுள் என்று வளரும்போது அனைத்திற்கும் தொழில் ஈடுகொடுத்துத் துணைநின்று வளர்ச்சி தரும் என்பது அடுத்து உறுதியாகிவிடும் உண்மை. முதலில் . .

"உண்டிகொடுத்தோர் உயிர் கொடுத்தோரே (1) . என்ற இலக்கியத் தொடர் எழச்செய்த உழவர் செய்யும் பயிர்த் தொழில் பற்றிய நாகையைக் காண்போம். .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/395&oldid=585285" இலிருந்து மீள்விக்கப்பட்டது