பக்கம்:நாகப்பட்டினம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 நாகபட்டினம்

சொன்னால் போர்க்கால நடவடிக்கையாகத்துறைமுகம் உருப்பெற் றிருக்கும். ஒரு சில ஆண்டுகளிலேயே ஒரு பட்டினமாயிருக்கும்.

அதற்கேற்ற அரசு அலுவலகங்கள், ஆட்சிப்பணியாளர்கள், படைநர்கள், வணிகர்கள் நிறைந்திருப்பர். பழம் பெயராகிய நாகர் தொடர்பிலேயே நாகர்பட்டினம் என்னும் பெயர் பெற்றது.

இப்பெயரே பெருவழக்காயிற்று. பிற்காலத்தில் நச்சினார்க் கினியரால் நாகப்பட்டினச் சோழன் என்று குறிக்கப்படும் அளவில் ஊர்ப்பெயர் - நகரப்பெயராகி பட்டினப் பெயருமாயிற்று.

இதுவரை காணப்பெற்ற வரலாறு நாகர்பட்டினத்தின் பழம் வரலாறு. நாகர்பட்டினம் என்னும் பெயர் பெற்றதன் தோற்றகால வரலாறு.

இத்துடன் நாகையின் வரலாறு நிறைந்துவிட்டதாகக் கொள்ள முடியாது. தொடர்ந்து எழுதப்பெறும் பகுதிகளிலும் வரலாற்றுச் செய்திகள் அதனதன் தொடர்பில் அமையும். அதனதன் தொடர்பு என்பது பெயர்த்தொடர்பில் நாகையின் வளர்ச்சி வரலாறு அமைவதும், ஆட்சித் தொடர்பில் இதன் வளப்ப வரலாறு அமைவதும், நகரமைப்பால் இதன் விரிவு வரலாறு அமைவதுமாகத் தொடர்வதாகும்.

இம்முதற் பகுதி நாகை வரலாற்றின் தோற்றுவாய்.

1. வரலாற்று நாகை

கொண்டு காட்டி நூற்குறுக்கம் - 4- ni : மூதுلسهدونهبه .1 2. இளங்கோவடிகள் ; சிலம்பு - 1:21,22 3. சாத்தனார் : Los of - 24:44-61 4. இளங்கோவடிகள் ទី១៤ – 1955.56 R.Edi:ii-iii : -- مس۔ --س س-.5 5. உருத்திரங்கண்ணனார் : பட்.பா 218 7. உருத்திரங்கண்ணனார் : Lut .Lum - 173 8. நக்கீரர் ; அகம் - 205:12 9. நத்தத்தனார் சிறுபான்-153.154 10. நச்சினார்க்கினியர்

சிறுபாண் - 153 உரை
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/58&oldid=584940" இலிருந்து மீள்விக்கப்பட்டது