பக்கம்:நாகப்பட்டினம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iy

பல்வகைச் சமயங்களின் பாங்கானகூட்டுறவு நகர் நாகை. எல்லாச் சமயங்களின் நெஞ்சங்களும் நாகையிலிருந்து பரவிக் கிடக்கின்றன.

பொதுவாகத் தமிழ் இலக்கியங்கள் நாட்டு வருணனை, நகர வருணனை, படலங்கள் கொண்டு இலங்கும் நாகை நகரின் இலக்கிய வரலாறும் இலக்கியப் பெருமையும் இந்நூலில் களிநடனம் புரிகின்றன. கவி காளமேகம் உள்ளிட்டு மறைமலையடிகள வரை மாத்தமிழ் வளர்த்த மாமனிதர்கள் மலர்ந்த மண் நாகை மண, தொலைந்து உள. அன்றும் இன்றும் என்றும் இலக்கிய 65T। கமழும் இலக்கிய நகர் நாகை வளமான புலமையால் இலக்கியமும் தமிழ்மொழியும் செழுமை பெற்ற வகையை நாகை வரலாறு நனகு. உணர்த்தும். பழைய இலக்கியம் மட்டுமல்ல புதுக்கவிதையும் பூத்துக் குலுங்கும் பொய்கை நகர். -

சோழ வளநாடு தமிழர் வளர்த்த அழகுக் கலைகளின் தாயகம், நாகையே ஒரு கலைக்களஞ்சியம். திருக்கோயில் சிற்பங்கள் கதைக் கருவூலங்கள். நாகை எப்போதும் வளர்கலைகளின் தாயகமாக வளர்ந் துள்ளது. கைவினைத் தொழில்களின் காப்பகம். செய்வினை நேர்த்தி மிக்க செய்பொருட்களின் சேமிப்பகம் நாகை.

தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகள் சிலை பழம் பெரு மைக்கும் புதுப் பெருமைக்கும் சான்றாகத் திகழும் நாகரிகச் சின்னம்.

அறுநூறு அரிய நூல்களை வெளியிட்ட மணிவாசகர் பதிப்பகம் மேற்கொள்ளும் புதிய வரிசையின் தொடக்கம் இது. இந்த அரிய ஆய்வு நூலை எழுதுவதற்குத் தகுதியும் திறமையும் பெற்ற இளஞ்சேரன் அவர்களைத் தேர்ந்தோம். இவர் நாகையில் அரை நூற்றாண்டுக் காலம் வாழ்ந்த அறிஞர். கோவை இளஞ்சேரன் கவிஞர் - அறிஞர் - சிந்தனையாளர் - ஆய்வாளர் - கலைஞர் எனப் பன்முக நலம் பெற்ற படைப்பாளர். நாடறிந்த புலவர். நாகைக்குப் புகழ் சேர்த்த நல்ல தமிழ்ப் புலவர். நாடு போற்றும் நல்லாசிரியர். செய்வன திருந்தச் செய்யும் செம்மல். அனைத்தையும் அழகியல் நோக்கில் காணும் கலைஞர். நற்றமிழ் பரப்பும் இளஞ்சேரன் நாகையில் புதுமை கண்டார். தெளிவும் தொலைநோக்கு முடைய சாதனையாளராகிய இவர் தமிழ்ப் பல்கலைக் கழகப் பதிப்புத் துறையின் முதல் துணை இயக்குநர். பல்கலைக் கழகத்தின் மாபெரும் சாதனையாகிய வாழ்வியல் களஞ்சியம், அறிவியல் களஞ்சியங்களை அழகிய அமைப்புடன் அச்சிட்ட செயலாளர். இவருடைய ஆராய்ச்சி அறிவுக்கு இந்நூல் ஒரு எடுத்துக்காட்டு. பல்லாண்டுகள் உழைத்து அரிதில் முயன்று எழுதித் தொகுத்த அறிவுக்களஞ்சியமாக இந்நூல் விளங்குகிறது.

எங்கள் வேண்டுகோளுக்கிணங்கிச் சிறந்ததொரு நூலை உருவாக் கிய நூலாசிரியர்க்கு நாங்களும் தமிழ்கூறு நல்லுலகமும் கடப்பாடு உடையோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/6&oldid=584891" இலிருந்து மீள்விக்கப்பட்டது