பக்கம்:நாகப்பட்டினம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 நாகபட்டினம்

காவிரியாற்றை வரவேற்றுப் பேசும் அத்தெய்வம், "என்பெயர்ப் படுத்த இரும்பெயர் மூதூர் - நின்பெயர்ப் படுத்தேன்; நீ வாழிய"(5) என்று என்பெயரால் "சம்பாபதி என்று பெயர் கொண்டிருந்த இவ்வூரை நின் பெயராகிய காவிரிப்பூம்பட்டினம் என்று பெயர்ப்படுத்தினேன்' என்று, தொடர்ந்து, -

"இருபாற் பெயரிய உருகெழு மூதுர்"(6) என்றது. இதுகொண்டு ஒரே ஊர் காலப்போக்கில் பெயர் மாறுவதும், வேறு பெயர் கொள்வதும் சில வேறுபட்ட பெயர்களில் வழங்கப்படுவதும் உண்டு.

ஆ. நாகைப் பெயர்கள் இவற்றையெல்லாம் சூழவைத்து நம் நாகைப் பெயரைக் காண்பது ஒரு வரலாறுமாகும். இவ்வரலாற்றுப் புதையலில் கண்டெடுக்கப்பெற்ற பெயர்கள்: 1. நீர்ப்பெயற்று

- இப்பெயர் இலக்கியம் காட்டிய செயற் காரணப்பெயர்; இது தமிழ்ப்பெயர். - 2. பதரி திட்டா

- இப்பெயர் இலந்தை மரத்திட்டால் பெற்ற காரணப் பெயருடன் புத்தத் துறவியர் இருப்பிடமான புத்தத் திருவிடப்பெயர்: இது பாளிமொழிக்கலப்பு. 3. நிகமா

- இப்பெயர் நாகநாட்டாரது புத்தத் தூய்மைக் குறியாகிய பெயர். இஃதும் தமிழ் வடமொழிக் கலப்பு. : #. 4. நாகானனம்

- இப்பெயர் நாகநாட்டார் இக்கடற்கரையை இந்நாட்டுப் புகுமுகமாகக் கொண்டு இட்ட அல்லது சூட்டிய பெயர். இத்தொடர் தமிழும் வடமொழியும் இணைந்த இணைப்புச் சொல். நாகர் + அனனம் என்று பிரிபடும். அனனம் என்றால் முகம், நாகர் கண்ட கடற்கரை முகம் - துறைமுகம் என்று பொருள்படும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/62&oldid=584944" இலிருந்து மீள்விக்கப்பட்டது